சென்ற மாதத்திற்கான தன் வீட்டு மின் கட்டணம் அதிகமான வந்துள்ளதாக நடிகை டாப்ஸி தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக நேற்று முன்தினம் குற்றம் சாட்டியிருந்தார்.
-
3 months of lockdown and I wonder what appliance(s) I have newly used or bought in the apartment only last month to have such an insane rise in my electricity bill. @Adani_Elec_Mum what kind of POWER r u charging us for? pic.twitter.com/jZMMoxDMgj
— taapsee pannu (@taapsee) June 28, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">3 months of lockdown and I wonder what appliance(s) I have newly used or bought in the apartment only last month to have such an insane rise in my electricity bill. @Adani_Elec_Mum what kind of POWER r u charging us for? pic.twitter.com/jZMMoxDMgj
— taapsee pannu (@taapsee) June 28, 20203 months of lockdown and I wonder what appliance(s) I have newly used or bought in the apartment only last month to have such an insane rise in my electricity bill. @Adani_Elec_Mum what kind of POWER r u charging us for? pic.twitter.com/jZMMoxDMgj
— taapsee pannu (@taapsee) June 28, 2020
அதானி எலெக்டிரிசிட்டி நிறுவனத்தை டேக் செய்து டாப்ஸி கேள்வி எழுப்பியிருந்த நிலையில், தற்போது அந்நிறுவனம் அதற்கு விளக்கமளித்துள்ளது. அதில் ”கரோனா தொற்று காரணமாக மார்ச் மாதத்திலிருந்து மீட்டர் வாசிப்பு நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது மீட்டர் வாசிப்பை நாங்கள் மீண்டும் தொடங்கியுள்ளோம். கடந்த டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி ஆகிய மூன்று மாதங்களிலும் குளிர் காலம் நிலவியது. ஆனால் அதற்கு பிந்தை ஏப்ரல், மே, ஜூன் மாதங்கள் கோடைக்காலத்தைச் சேர்ந்தவை என்பதால் மின் உபயோகம் அதிகமாக இருந்துள்ளது. தவிர ஊரடங்கு காரணமாகவும் பெரும்பாலான வீடுகளில் மின்சார உபயோகம் அதிக அளவில் உள்ளது” என்று மும்பை அதானி மின் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
”மகாராஷ்டிரா மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் வழிகாட்டுதலின்படிதான் ரசீதுத் தொகை கணக்கிடப்படும். நுகர்வோருக்கு அவர்களது உண்மையான மின் உபயோகத்தைப் பொருத்துதான் சலுகைகளுடன் ரசீதுகள் வழங்கப்படுகின்றன” என்றும் செய்தித் தொடர்பாளர் தனது பதிலில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக டாப்ஸி யாருமே தங்காத தனது இன்னொரு வீட்டிற்கும் அதிகப்படியான மின் கட்டணம் வந்துள்ளதாகத் தெரிவித்திருந்தார். தன் வீட்டின் மின் கட்டண ரசீதின் புகைப்படத்தையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, ”யாருமே தங்காத, அதுவும் வாரம் ஒருமுறை மட்டும் ஒருவர் வந்து சுத்தம் செய்து செல்லும் மற்றொரு அப்பார்ட்மெண்டுக்கும் இவ்வளவு கட்டணம் வந்துள்ளது. ஒருவேளை எங்களுக்குத் தெரியாமல் யாராவது அந்த அப்பார்ட்மெண்ட்டை பயன்படுத்துகிறார்களா என்று பயமாக இருக்கிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் நீங்கள் எங்களுக்கு அதை அறிய உதவி செய்திருக்கிறீர்கள்” என்று கேலியாக ட்வீட் செய்திருந்தார்.
இதற்கும் பதிலளித்த செய்தித் தொடர்பாளர், ”இது குறித்து எழுப்பப்பட்ட புகாரைத் தொடர்ந்து நாங்கள் மீட்டர் வாசிப்பை சரிபார்த்தோம். அனைத்தும் சரியாகவே உள்ளது' எனவும் தெரிவித்துள்ளார்.
-
And this one is for an apartment where no one stays n it’s only visited once in a week for cleaning purpose @Adani_Elec_Mum I am now worried if someone is actually using the apartment without our knowledge and you have helped us uncover the reality 🤷🏻♀️ pic.twitter.com/GeBQUSJaft
— taapsee pannu (@taapsee) June 28, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">And this one is for an apartment where no one stays n it’s only visited once in a week for cleaning purpose @Adani_Elec_Mum I am now worried if someone is actually using the apartment without our knowledge and you have helped us uncover the reality 🤷🏻♀️ pic.twitter.com/GeBQUSJaft
— taapsee pannu (@taapsee) June 28, 2020And this one is for an apartment where no one stays n it’s only visited once in a week for cleaning purpose @Adani_Elec_Mum I am now worried if someone is actually using the apartment without our knowledge and you have helped us uncover the reality 🤷🏻♀️ pic.twitter.com/GeBQUSJaft
— taapsee pannu (@taapsee) June 28, 2020
இதையும் படிங்க... 'கார்த்திகாவுக்கு நடந்ததுதான் எனக்கும் நடந்தது' - குமுறும் டாப்சி