சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் 'கங்குபாய் கதியாவாதி' என்னும் படத்தில் நடிகை ஆலியா பட் தற்போது நடித்துவருகிறார். இந்தப் படப்பிடிப்பின்போது சஞ்சய் லீலா பன்சாலிக்கு கரோனா தொற்று உறுதியானது.
இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 2ஆம் தேதி ஆலியாபட்டுக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனைத் தொடர்ந்து வீட்டில் தனிமைப்படுத்தி சிகிச்சை மேற்கொண்டுவந்த ஆலியா பட் ஏப்ரல் 14ஆம் தேதி கரோனா தொற்றிலிருந்து மீண்டுவந்தார்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
இந்நிலையில், ஆலியாவும் ரன்வீரும் இன்று (ஏப்ரல் 19) மும்பை விமான நிலையத்திற்கு வந்தனர். அங்கிருந்து விமானம் மூலம் மாலத்தீவுக்குச் சுற்றுலாவுக்குச் சென்றனர்.
இவர்கள் இருவரும் மும்பை விமான நிலையத்திற்கு வெள்ளை நிற உடையணிந்து வந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டுவருகிறது.