நீண்ட இடைவெளிக்குப் பின் 'பாலிவுட் பாட்ஷா' ஷாருக்கான் நடிக்கவுள்ள படம் 'பதான்'. சித்தார்த் ஆனந்த் இயக்கும் இந்தப் படத்தை, யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது.
இந்தப் படத்தில் ஜான் ஆபிரகாம், தீபிகா படுகோனே உள்ளிட்ட பிரபலங்கள் நடிக்கின்றனர். மேலும் சல்மான் கான் சிறப்பு தோற்றத்திலும் நடிக்கவுள்ளார்.
சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. நீண்ட இடைவெளிக்குப் பின் ஷாருக்கான் படத்தைத் திரையில் பார்க்க, அவரது ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கின்றனர். நடப்பு ஆண்டு (2021) இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
ஷாருக் - தீபிகா ஜோடி
அதுமட்டுமல்லாது 'ஓம் சாந்தி ஓம்', 'சென்னை எக்ஸ்பிரஸ்', 'ஹேப்பி நியூ இயர்' படங்களைத் தொடர்ந்து ஷாருக் கானும் தீபிகா படுகோனேவும் மீண்டும் 'பதான்' திரைப்படத்தின் மூலம் திரையில் இணைந்திருப்பது ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
விறுவிறுப்பாக நடைப்பெற்று பதான் படக்குழு தற்போது பாடல் காட்சியை படமாக்க ஸ்பெயின் செல்லவுள்ளது. இதற்காக ஸ்பெயின் நாட்டு அரசிடம் பதான் படக்குழு முறையான அனுமதியை பெற்றுள்ளது.
விரைவில் அட்லி இயக்கத்தில் ஷாருக்...
பாலிவுட் படங்களில், ஸ்பெயினில் இதுவரை காட்சிப்படுத்தப்படாத இடங்களில் இந்தப் பாடல் காட்சிகளை நடத்திட படக்குழு திட்டமிட்டுள்ளது. இது பார்வையாளர்களுக்கு புதிய அனுபவத்தைத் தரும் எனவும் படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இந்தப் படத்தை முடித்த பின் ஷாருக் கான் அட்லி இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சமூகவலைதளத்தில் பெயரை மாற்றிய தீபிகா படுகோனே