ETV Bharat / sitara

மனவேதனையில் அனுராக் காஷ்யப் - புகாரை சட்டப்பூர்வமாக எதிர்கொள்ள உள்ளதாகத் தகவல் - பாலிவுட் செய்திகள்

தன் மீது எழுப்பப்பட்ட பாலியல் புகாரை சட்டப்பூர்வமாக அணுகவுள்ளதாக பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப், தன் வழக்கறிஞர் மூலம் தெரிவித்துள்ளார்.

அனுராக்
அனுராக்
author img

By

Published : Sep 21, 2020, 6:41 PM IST

பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் தன்னிடம் அத்துமீறி நடந்து கொண்டதாகவும், எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாலிவுட் நடிகை பாயல் ’Me too’ இயக்கத்தின் கீழ் பரபரப்புக் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

ஆனால் அவரது குற்றச்சாட்டை அடுத்து, அதற்கு நேரெதிராக அவரது முன்னாள் மனைவியும் நடிகையுமான கல்கி கோச்சலின், பாலிவுட் நடிகைகள் ராதிகா ஆப்தே, சுர்வீன், டிஸ்கா சோப்ரா, இயக்குநர் அனுபவ் சின்ஹா எனப் பலரும் ”அனுராக் அப்படிப்பட்டவர் அல்ல, அவர் ஒரு பெண்ணிடம் ஒருபோதும் அத்துமீறி நடக்க மாட்டார்” எனக் கூறி திரையுலகைச் சேர்ந்த பலரும் பதிவுகளிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தான் இந்த விஷயத்தை சட்டப்பூர்வமாக எதிர்கொள்ள உள்ளதாக தனது வழக்கறிஞர் பிரியங்கா கிமானி மூலம் அனுராக் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அனுராக்கின் வழக்கறிஞர் பிரியங்கா வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தன்னைப் பற்றி சமீபத்தில் வலம் வரும் அவதூறுகளால் அனுராக் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளார். இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் முற்றிலும் தவறானவை, நேர்மையற்றவை.

#Metoo போன்ற முக்கியமான ஒரு சமூக இயக்கம், சொந்த நலன்களுக்காகப் பயன்படுத்தப்பட்டு, முக்கியமாக ஒருவரை ஒழுக்கமற்றவராக சித்தரிப்பதற்கான கருவியாக சுருங்கியுள்ளது வேதனையளிக்கிறது. இதுபோன்ற கற்பனையான குற்றச்சாட்டுகள், இந்த இயக்கத்தை சிறுமைப்படுத்தி, பாலியல் துன்புறுத்தல்களால் பாதிக்கப்பட்டவர்களின் வலியையே கேலிக்குள்ளாக்குகிறது.

எனது வாடிக்கையாளருக்கு அவரது உரிமைகள், சட்டத்தில் உள்ள தீர்வுகள் உள்ளிட்டவை குறித்து அறிவுறுத்தி, அவற்றை முழுமையாகப் பின்தொடருமாறு கூறியுள்ளேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், பிரியங்காவின் இந்தப் பதிவைப் பகிர்ந்து அவருக்கு அனுராக் தன் சமூகவலைதளப் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : அனுராக் காஷ்யப்பிற்கு ஆதரவு தெரிவித்த பாலிவுட் நடிகைகள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.