தேசிய விருது பெற்ற இயக்குநர் ஆதித்யா விக்ரம் சென்குப்தா இயக்கியுள்ள ‘ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் கல்கத்தா’ திரைப்படம், வெனிஸ் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுவதற்கு தேர்வாகியுள்ளது.
‘ஆஷா ஜோர் மாஜே’ படத்தின் மூலம் வங்காளத்தில் இயக்குநராக அறிமுகமானவர் ஆதித்யா விக்ரம் சென்குப்தா. அறிமுக இயக்குநரின் சிறந்த படத்துக்கான தேசிய விருதை ‘ஆஷா ஜோர் மாஜே’ படத்துக்காக இவர் வென்றார். தற்போது இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள மூன்றாவது திரைப்படம் ‘ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் கல்கத்தா’ (Once Upon A Time In Calcutta).
நவீன தாராளமயக் கொள்கையால் எளிய மக்கள் படும் துயரத்தை விவரிக்கும் இத்திரைப்படம், வெனிஸ் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுவதற்கு தேர்வாகியுள்ளது. இந்தியாவில் இருந்து இந்த விழாவுக்கு தேர்வாகியுள்ள ஒரே திரைப்படம் இதுதான். செப்டம்பர் 1 முதல் 11ஆம் தேதி வரை இந்தத் திரைப்பட விழா நடைபெறவுள்ளது.
இந்தப் படத்தில் துருக்கிய ஒளிப்பதிவாளர் கோகன் திரியாகி, டச்சு இசையமைப்பாளர் மின்கோ எக்கர்ஸ்மேன் ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.
இதையும் படிங்க: கல்ட் கிளாசிக்: 53 yrs of தில்லானா மோகனாம்பாள்