நடிகர் விஜயுடன் ’குஷி’, பிரபுதேவா உடன் ’ரோமியோ’ உள்ளிட்ட 90களின் பிரபல தமிழ்ப் படங்களில் நடித்தவர் பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி. ’பிக் பிரதர்’ எனும் நிகழ்ச்சியின் உலகப்புகழ்பெற்ற ஷில்பா ஷெட்டி, தொடர்ந்து திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்க்கையில் புகுந்தார்.
யோகா ஆர்வலர் ஷில்பா
அதன்பிறகு அவர் நடிப்புக்கு ஓய்வளித்து, யோகாசனத்தின் மீது கவனத்தைத் திருப்பினார். தன் உடலை கட்டுக்கோப்பாகப் பேணுவதில் பெரும் ஆர்வமுடைய ஷில்பா ஷெட்டி, யோகா குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சில் பலவற்றிலும் கலந்துகொண்டு மக்களிடம் தொடர்ந்து இதுகுறித்து உரையாடி வருகிறார்.
உலக யோகா தினத்தில் ட்வீட்
இந்நிலையில், இன்று (ஜூன்.21) உலக யோகா தினத்தை ஒட்டி ஷில்பா ஷெட்டி யோகா குறித்து விழிப்புணர்வு வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். இந்தியாவில் கரோனா தொற்றின் இரண்டாம் அலை தற்போது அடங்கி வரும் நிலையில், கரோனாவிலிருந்து குணம்பெற உதவும் ’பிரம்மரி பிராணாயாமம்’ எனும் பயிற்சியை தனது ரசிகர்களுக்கு கற்றுக் கொடுக்கும் வகையில் இந்த வீடியோவை ஷில்பா பகிர்ந்துள்ளார்.
பிரம்மரி பிராணாயாமம்
இந்த வீடியோவுடன், "ஆழமாக மூச்சு விடுங்கள் ... இது உடலின் மிக முக்கிய செயல்பாடு. அறிவாற்றல் முதல் செரிமானம் வரை, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவது வரை அனைத்து முக்கியமான செயல்முறைகளையும் செய்ய உறுப்புகளுக்கு ஆக்ஸிஜனை வழங்க சுவாசம் உதவுகிறது. எனவே இந்த உலக யோகா தினத்தில், பிரம்மரி பிராணயாமம் பயிற்சி மேற்கொள்ளுங்கள்” எனவும் அவர் பகிர்ந்துள்ளார்.
இதையும் படிங்க: தளபதியின் பீஸ்ட்: என்ன சொல்கிறது ஃபர்ஸ்ட் லுக்?