45 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் தனது பங்களிப்பை செலுத்திவரும் பழம்பெரும் நடிகர் நசிருதீன் ஷா. திரைத்துறை மீதுள்ள காதல் குறையாமல் இன்றும் இருக்கிறார். இதன் காரணமாக புதுமுகங்களுடன் சேர்ந்து பணிபுரிய விரும்பும் நசிருதீன், சில கருத்துகளை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், புதுமுக நடிகர்கள் என் முன் பதட்டப்படுவதை பெருமையாக கருதமாட்டேன். சக நடிகர்களுக்கு எனது பங்களிப்பு தொந்தரவை ஏற்படுத்தினால், நான் அவர்களை அதிலிருந்து மீட்டெடுக்க உதவியாக இருப்பேன். இது நான் என்னுடைய முன்னோடிகளிடமிருந்து கற்றுக்கொண்டது. நான் மிகவும் விரும்பும் மூத்த நடிகர்களான திலிப் குமார், சீன் கோன்னெரி, அசோக் குமார் ஆகியோருடன் பணிபுரியும்போது நான் பதட்டப்பட்டதில்லை. அதற்கான சூழலையும் அவர்கள் ஏற்படுத்தவில்லை என கூறியுள்ளார்.
நசுருதீன் ஷா மூன்று முறை தேசிய விருது பெற்றவர். அவரது ‘A wednesday' படத்தை ‘உன்னைப்போல் ஒருவன்’ என கமல்ஹாசன் ரீமேக் செய்து நடித்தது குறிப்பிடத்தக்கது.