ETV Bharat / sitara

போதைப் பொருட்கள் வழக்கு: நேரில் ஆஜரான நடிகை ஷ்ரதா கபூர் - பாலிவுட்டில் போதை பொருட்கள்

மும்பை: சுஷாந்த் சிங் மரண வழக்கு தொடர்பான விசாரணைக்காக போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் நடிகை ஷ்ரதா கபூர் ஆஜரானார்.

ஷ்ரத்தா கபூர்
ஷ்ரத்தா கபூர்
author img

By

Published : Sep 26, 2020, 12:48 PM IST

பாலிவுட்டில் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் பெரும் சர்ச்சைகளையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது. அவரின் மரணம் தொடர்பான வழக்கு தற்போது சிபிஐ, அமலாக்க இயக்குநரகம், போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் என இந்திய அரசின் முக்கிய துறைகள் விசாரித்து வருகிறது.

சுஷாந்த் சிங் காதலி ரியா சக்ரவர்த்தியிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்ட சமயத்தில், அவருக்கு போதைப் பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பது செல்போன் உரையாடல் மூலம் அம்பலமானது.

இதையடுத்து அவரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டதில், நடிகைகள் ரகுல் ப்ரீத் சிங், சாரா அலி கான், ஷ்ரதா கபூர், தீபிகா படுகோனே உள்ளிட்டோர் சம்பந்தப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

இதனை அடுத்து இவர்களை விசாரிக்க நேரில் ஆஜராகுமாறு என்சிபி சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது. நேற்று (செப்டம்பர் 25) ரகுல் ப்ரீத் சிங் ஆஜராகினார். தற்போது ஷ்ரத்தா கபூர் ஆஜரானார்.

2018ஆம் ஆண்டு வெளியான சூப்பர்ஹிட் படமான 'சிச்சோர்' படத்தில் சுஷாந்திற்கு ஜோடியாக ஷ்ரதா கபூர் நடித்திருந்தார்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.