ETV Bharat / sitara

மருத்துவமனை ஊழியர்களை தாக்கிய நசிருதீன் ஷா மகள் மீது வழக்கு - கால்நடை மருத்துமனை ஊழியர்களை தாக்கிய நசிருதீன் ஷா மகள்

கால்நடை மருத்துவமனை ஊழியர்களிடம் ஆக்ரோஷத்துடன் நடந்துகொண்டது மட்டுமல்லாமல், அவர்களை தாக்கியதற்காக நடிகை ஹீமா ஷா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Naseeruddin Shah's daughter beats up women employees
Case filed against Naseeruddin Shah's daughter
author img

By

Published : Jan 27, 2020, 11:47 PM IST

மும்பை: பாலிவுட் மூத்த நடிகர் நசிருதீன் ஷா மகள் மீது மும்பை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மும்பை வெர்சோவா பகுதி போலீசார் நசிருதீன் ஷா மகள் ஹீபா ஷா மீது பொது இடத்தில் தவறாக நடந்துகொண்டதாக வழக்கு பதிவு செய்துள்ளனர். கால்நடை மருத்துவமனை ஊழியர்கள் இருவரை தாக்கியதற்கான சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அவர் மீது இந்த வழக்கு பதிவுசெய்யப்பட்டது.

தி ஃபெலைன் பவுன்டேஷன் நடத்தி வரும் கால்நடை மருத்துவமனைக்கு ஹீபா ஷா தனது பூனைக்கு ஊசி போடுவதற்காக வந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.

இதுபற்றி அறக்கட்டளையின் அறங்காவலர் மிருது கோசலா கூறியதாவது:

ஜனவரி 16ஆம் தேதி மதியம் 2.50 மணியளவில் நடிகை ஹீபா ஷா எங்களது கால்நடை மருத்துவமனைக்கு தனது இரண்டு பூனைக்குட்டிகளுக்கு ஊசி போடுவதற்காக வந்தார். அப்போது அறுவை சிகிச்சை நடைபெற்றுக்கொண்டிருந்ததால் மருத்துவமனையின் கவனிப்பாளர் ஐந்து நிமிடம் காத்திருக்குமாறு தெரிவித்தார்.

இரண்டு நிமிடம் வரை காத்திருந்த ஹீமா ஷா, திடீரென எங்கள் ஊழியர்களிடம் கத்த தொடங்கினார்.

'நான் யாரென்று உங்களுக்கு தெரியுமா? உதவியாளர் யாரும் இல்லாமல் என்னை எப்படி நீங்கள் காக்க வைக்கலாம்? நான் வரும்போது என்னுடன் வந்த பூனைக் குட்டிகளை கூண்டிலிருந்து வெளியேற்ற ஏன் யாரும் உதவவில்லை?' என்று ஆக்ரோஷத்துடன் பேசினார்.

திடீரென இரண்டு ஊழியர்களையும் தாக்கினார். காரணமில்லாமல் அவர் கத்துவதை பார்த்து மூத்த ஊழியர் ஒருவர் அவரை அங்கிருந்து வெளியேறுமாறு கூறினார்.

இவ்வாறு அறங்காவலர் கோசலா தெரிவித்தார்.

இதையடுத்து மருத்துவமனை ஊழியர்களை தாக்கியதை ஒப்புக்கொண்ட ஹீமா ஷா, இந்த சம்பவம் குறித்து கூறியதாவது:

நான் ஊழியர்களை தாக்கியதற்கு அவர்கள்தான் காரணம். மருத்துவமனை காவலாளி பல கேள்விகளை கேட்டு என்னை உள்ளே அனுமதிக்காமல் தடுத்தார். அப்போது மருத்துவமனை வருவதற்கான அப்பாயின்ட்மெண்டை பெற்றுவிட்டேன் என்று தெரிவித்து வந்தேன்.

பின்னர் ஊழியரிடம் காவலாளி நடந்தவற்றை கூறியபோது அவரும் என்னிடம் நாகரிகமற்ற முறையில் பேசினார். மருத்துவமனையில் வேலை பார்க்கும் பெண் ஒருவர் என்னை தள்ளியதுடன் அந்த வளாகத்திலிருந்து வெளியேறுமாறு கூறினார்.

மருத்துவமனைக்கு வருபவர்களிடம் இவ்வாறு நடந்துகொள்வது சரியான முறையல்ல. ஊழியர்கள் அங்கு வருபவர்களிடம் மிகவும் பணிவாக நடந்துகொள்ள வேண்டும் என்றார்.

கமல்ஹாசன் நடித்து இயக்கிய 'ஹேராம்' படத்தில் காந்தி கதாபாத்திரத்தில் நடித்தவர் நசிருதீன் ஷா. பாலிவுட் சினிமாவின் மூத்த நடிகரான இவரது மகள் ஹீபா ஷா இந்தியில் சில படங்களில் நடித்துள்ளார்.

Intro:Body:

Daughter of actor Naseeruddin Shah reportedly assaulted two women employees of a veterinary clinic in Mumbai on January 16. Police officials have registered a non-cognisable offence against his daughter.

Mumbai: Acclaimed actor Naseeruddin Shah's daughter Heeba Shah has beaten up two women employees of a veterinary clinic in the city.

According to news reports, Versova police have registered a non-cognisable offence against the actor's daughter.

The entire incident was captured in the CCTV camera present at the veterinary clinic. The footage has been handed over to the police.

Heeba reportedly took two cats of her belonging to her friend for sterilisation at the clinic, which is run by The Feline Foundation.

"On January 16 at 2.50 pm actress Heeba Shah walked into our community veterinary clinic with two cats for sterilisation. Our clinic caretaker asked her to wait for 5 minutes as surgery was on. After 2-3 minutes of waiting, she aggressively said to our staff members, 'Don't you know who I am? How can you make me wait for so long outside without any assistance? How come no one helped me to get my cats' cage out of the rickshaw on arrival?" said Mriidu Khosla, a trustee of the foundation.

She added that a senior staff member asked her to leave the premises with her cats after she began to verbally abuse for no reason.

Khosla said: "She also slapped and assaulted two female staff members. The physical abuse was harsh, extremely violent and disturbing to say the least."

Heeba accepted to have hit the employees but she said that they started the fight.

Speaking to a news portal, Heeba said: "I did hit them, but they started it. The gatekeeper didn't allow me to enter the clinic and asked several questions. I told him that I had an appointment. In the clinic when I told the attendant about the watchman, she also started abusing me and speaking rudely. Then one of the women there pushed me and told me to get out from the premises immediately."

She concluded: "This is not the way to speak to anyone who is visiting the clinic. The lady in the clinic started fighting with me. The clinic staff should talk politely to customers visiting their clinic."

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.