கரோனா வைரஸ் காரணமாக மே 3ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள் அனைவரும் வீட்டில் முடங்கியுள்ளனர்.
கடிகாரம் போல் தொடர்ந்து சுற்றித் திரிந்த அவர்கள், வீட்டில் முடங்கியுள்ளதால் தங்களது பழைய புகைப்படங்களை வெளியிட்டு, அந்த புகைப்படத்தைப் பற்றி விரிவாக பதிவிட்டு வருகின்றனர்.அந்த வகையில் நடிகை டாப்சி அவ்வப்போது புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றார்.
2018ஆம் ஆண்டு அனுராக் காஷ்யப் இயக்கத்தில் அபிஷேக் பச்சன், டாப்சி, விக்கி கெளசல் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியானப்படம் 'மன்மர்ஜியான்'. இப்படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை டாப்சி தற்போது தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில் ஸ்கூட்டரில் மன்மர்ஜியான் கதாபாத்திரத்தின் உடையணிந்து அமர்ந்திருக்கும் டாப்சியின் பின்னால் ஒளிப்பதிவாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் படப்பிடிப்புக்காக தயார் படுத்தும் பணியில் இருக்கின்றனர்.
இது குறித்து டாப்சி கூறுகையில், இது எனக்கும் எனது திறமைக்குமான சமநிலை. இது போன்ற படப்பிடிப்பு தளப்புகைப்படத்தை தற்போது இழப்பதாகவும் கூறியுள்ளார்.