ETV Bharat / sitara

'குடிபெயர்ந்த தொழிலாளர்களை மனிதர்களாகப் பாருங்கள்' - சோனு சூட் உருக்கம் - சோனுசூட்டின் படங்கள்

ஊரடங்கால் மும்பையில் வேலையிழந்து, உணவு, உறைவிடமின்றி திண்டாடி வந்த குடிபெயர்ந்த தொழிலாளர்களை, சிறப்புப் பேருந்துகள் மூலம் அவர்களது சொந்த ஊர்களுக்குத் திருப்பி அனுப்பிவைக்கும் நடிகர் சோனு சூட்டின் முயற்சியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

sonu
sonu
author img

By

Published : May 16, 2020, 1:28 PM IST

இந்தியில் 'தபாங்', 'சிங் இஸ் கிங்', 'சிம்பா', தமிழில் 'குத்து', 'அருந்ததி', 'ஒஸ்தி' உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளவர் பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட்.

கரோனா பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால், மும்பையில் வேலைசெய்து வந்த குடிபெயர்ந்த தொழிலாளர்கள் பலர், வேலையிழந்து, உணவு உறைவிடமின்றி திண்டாடி வருகின்றனர். இவர்களைப் பார்த்து மனம் வருந்திய சோனு சூட், அண்டை மாநில அரசுகளுடன் பேசி தன் சொந்த செலவில் சிறப்புப் பேருந்துகள் மூலம் இவர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைத்து வருகிறார்.

இதுகுறித்து சோனுசூட் கூறுகையில், "குடிபெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலத்திற்கு குடும்பத்தினருடன் நெடுஞ்சாலையில் நடந்து செல்வதைப் பார்த்து, நான் ஏசி அறையில் அமர்ந்து ட்வீட் செய்ய முடியாது. இவர்களுக்கு உதவுவது தான் எனது முக்கியக் கடமை.

இப்போது எனக்குத் தினமும் பல பேர்களிடம் இருந்து உதவி செய்யுமாறு கோரிக்கை வருகிறது. ஊரடங்கில் எனது முழு வேலையே இவர்களுக்கு உதவுவது மட்டுமே. தொழிலாளர்கள் துன்பங்களைப் பார்க்கும்போது என்னால் இரவில் உறங்க முடியவில்லை. இதைப் பார்க்கும்போது நமக்குள் இருக்கும் மனிதத் தன்மையை இழந்து விடுவோமோ என்ற எண்ணம் ஏற்படுகிறது.

அவர்களது சொந்த ஊரை விட்டும் உறவினர்களை விட்டும் இங்கு வந்து எங்களுக்காக உழைத்து வருகின்றனர். இந்த நேரத்தில் நாம் அவர்களுக்கு ஆதரவு அளிக்கவில்லை என்றால், நாம் மனிதர்களே கிடையாது. நாம் எல்லாவற்றையும் விட்டு ஒரே குடும்பமாக ஒரே தேசமாக மாறும் காலம் இது. யாரும் கவலைப்பட வேண்டாம். இதுவும் கடந்து போகும்.

எனக்கு ஒரு மிகப்பெரிய வருத்தம் இப்போது உள்ளது. நம் சமூகத்தில் குடிபெயர்ந்த தொழிலாளர்களை வெறும் நம்பராக மட்டுமே பார்க்கிறோம். அவர்களை மனிதராகப் பார்ப்பதில்லை. சமீபத்தில், ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குறித்த செய்திகளில் 8 தொழிலாளர்கள் இறப்பு, 16 தொழிலாளர்கள் இறப்பு என்று தான் குறிப்பிடப்படுகின்றன.

அவர்களது பெயர்களை நாம் ஏன் குறிப்பிடவில்லை. இதேபோன்ற விபத்து விமானத்தில் நடந்திருந்தால் அப்படி விடுவதில்லை. தயவுசெய்து அவர்களை மனிதராகப் பாருங்கள். அவர்களுக்கு வேண்டிய எல்லா உதவிகளையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன்" என்று கூறினார்.

இதையும் படிங்க: 'அவதார் 2 திட்டமிட்ட தேதியில் வெளியாகும்' - ஜேம்ஸ் கேமரூன் நம்பிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.