இயக்குநர் சந்திரபிரகாஷ் திவேதி இயக்கத்தில் அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகி வரும் படம் பிருத்விராஜ். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் முன்னாள் மிஸ் வேர்ல்டு மனுஷி சில்லர் நடித்துவருகிறார். இப்படத்தின் மூலம் அவர் பாலிவுட்டுக்கு என்ட்ரியாகியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள அஜ்மீர் நகரை தலைநகராகக் கொண்டு ஹரியானா, டெல்லி, பஞ்சாப், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மாநிலங்களில் சில பகுதிகளை ஆண்ட சஹமன வம்சத்தின் மன்னரான பிருத்விராஜ் செளகான் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகிவருகிறது.
-
At every ‘step’, they’ve got my back. #SongShoot #Prithviraj pic.twitter.com/Q43TKXyEBG
— Manushi Chhillar (@ManushiChhillar) January 30, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">At every ‘step’, they’ve got my back. #SongShoot #Prithviraj pic.twitter.com/Q43TKXyEBG
— Manushi Chhillar (@ManushiChhillar) January 30, 2020At every ‘step’, they’ve got my back. #SongShoot #Prithviraj pic.twitter.com/Q43TKXyEBG
— Manushi Chhillar (@ManushiChhillar) January 30, 2020
தற்போது மனுஷி சில்லர் தனது சமூகவலைதள பக்கத்தில் இப்படத்தின மேக்கப் கலைஞர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக புகைப்படத்தை ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் பாடல் காட்சியில் கலந்துகொள்வதற்கு முன் மனுஷி சில்லர், மேக்கப் அறையில் மேக்கப் மேன் அவருக்கு மேக்கப் இடும் சில்அவுட் புகைப்படத்தை வெளியிட்டு ஒவ்வொரு ‘அடியிலும்’, அவர்கள் எனக்கு பின்னால் உள்ளனர் என்றும் பதிவிட்டுள்ளார். பெரும் பொருட்செலவில் தயாராகும் இந்தப் படம் 2020ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
இதையும் வாசிங்க: கவர்ச்சிகர சைவ உணவுப் பிரியர் மனுஷி சில்லர்!