ஹைதராபாத்: புராண காவியமான ராமாயணத்தில், ராமர் வேடத்தில் நடிப்பதற்கு படக்குழுவினர்கள் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவை அணுகியுள்ளனர்.
பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் நடிப்பில் ராமயணம் கதை, இந்தியில் 3டி படமாக தயாராகிறது. இதில் ராவணன் வேடத்தில் ஹிர்திக் ரோஷன் நடிக்கவுள்ளார். இதையடுத்து பிரதான கதாபாத்திரமான ராமர் வேடத்தில் நடிக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
ராமர் வேடத்தில் மகேஷ் பாபு
பல முன்னணி நடிகர்களிடம் இதுதொடர்பாக பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டது. தற்போது தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவை 3டியில் உருவாகும் ராமாயணம் படத்தில் ராமராக நடிக்க வைக்க முயற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
இந்தப் படத்துக்காக அமைக்கப்பட்ட திரைக்கதையும், அதன் பார்வையும் அவருக்கு பிடித்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் அவர் இன்னும் சம்மதம் தெரிவிக்கவில்லை எனத் தெரிகிறது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
பாலிவுட்டில் ஆமிர்கான் நடித்து வெளியான கஜினி, குயின், ரத்தசரித்ரா உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை தயாரித்த மது மந்தேனா ராமாயணம் படத்தை தயாரிக்கிறார். நடிகை தீபிகா படுகோன் படத்தில் இணை தயாரிப்பாளராக உள்ளார்.
முதல் சாய்ஸாக பிரபாஸ்
முன்னதாக இந்தப் படத்தில் ராமர் வேடத்தில் நடிக்க பாகுபலியாக மிரட்டிய பிரபாஸ்தான் முதல் தேர்வாக இருந்தார். ஆனால் அவர் ஏற்கனேவே ராமாயண கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் ஆதிபுருஷ் படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி இருந்ததால், வேறு நடிகரை நடிக்க வைக்கலாம் என்று படக்குழுவினர் முடிவு செய்தனர். இதையடுத்து தற்போது மகேஷ் பாபுவை அணுகியுள்ளனர்.
2008ஆம் மும்பையில் நடைபெற்ற தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் சந்தீப் உன்னிகிருஷ்ணன் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு மேஜர் என்ற பெயரில் உருவாகும் படத்தை தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார் மகேஷ் பாபு. இந்தப் படத்தில் அத்வி ஷே பிரதான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். படம் ஒரே நேரத்தில் தெலுங்கு, இந்தி ஆகிய இருமொழிகளிலும் தயாராகிறது.
இதையும் படிங்க: டைட்டானிக் காதலும் கவுந்து போகும் ரிலீஸ் தேதி அறிவிப்பு