ETV Bharat / sitara

லிப் கிஸ் புகைப்படம்: ரசிகர்களிடம் மாட்டிக்கொண்ட ஆலியா பட் - ரன்பீர்

பாலிவுட் நடிகை ஆலியா பட் தனது மொபைல் போன் வால்பேப்பராக ரன்பீர் கபூரும் ஆலியாவும் லிப் கிஸ் அடிப்பது போன்ற புகைப்படம் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

author img

By

Published : Mar 6, 2020, 10:52 AM IST

Ranbir Kapoor
Ranbir Kapoor

பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிப்பில் உருவாகியுள்ள 'கில்டி' படத்தின் சிறப்பு காட்சியில் ஆலியா பட் கலந்துகொண்டார். அப்போது அவரின் மொபைல் போன் வால்பேப்பரில் ரன்பீர் கபூரும் ஆலியாவும் ஒருவரை ஒருவர் பார்த்து லிப்கிஸ் அடிக்கும் புகைப்படத்தை வைத்துள்ளார்.

இந்தப் புகைப்படம் அங்கிருந்தவர்களின் கண்களில் பட, உடனே சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலானது. அந்த புகைப்படம் பார்க்கையில், சமீபத்தில் ரன்பீர் கபூரின் உறவினர் திருமணம் ஒன்றில் ஆலியா பட் கலந்துகொண்டபோது எடுத்துக்கொண்டதாகத் தெரிகிறது.

ஏற்கனவே ஆலியா பட் - ரன்பீர் கபூர் இடையேயான காதல் குறித்து உலா வரும் தகவல்களுக்கு இடையே தற்போது இந்தப் புகைப்படம் வெளியாகியுள்ளது. ஆலியாவும் ரன்பீரும் இந்தாண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்ய இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் சமூகவலைதளங்களில் காதல் எமோஜிகளைப் பொழிந்து வருகின்றனர்.

இதையும் படிங்க: பாலிவுட் நட்சத்திர ஜோடி ஆலியா - ரன்பீருக்கு டிசம்பரில் திருமணம்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.