மாநாடு சிறப்பாக நடைபெற வேண்டி ஒரு ரூபாய்க்கு டீ வழங்கிய தவெக தொண்டர்கள்! - tea for 1 rupee - TEA FOR 1 RUPEE
🎬 Watch Now: Feature Video
Published : Oct 6, 2024, 10:41 PM IST
விருதுநகர்: நடிகர் விஜய் புதிதாக துவங்கி உள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு வரும் 27ம் தேதி, விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில் நடைபெற உள்ளது. இம்மாநாட்டிற்கான முன்னேற்பாடு பணிகளை அக்கட்சியினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. இதை முன்னிட்டு, மாநாட்டு நிகழ்ச்சிக்கு பந்தகால் நடும் விழா நேற்று முன்தினம் அதிகாலை 4:30 மணிக்கு கட்சியின் மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்றது.
இந்நிலையில் மாநாடு சிறப்பாக நடைபெற வேண்டி, தவெக விருதுநகர் மேற்கு மாவட்ட இணைச் செயலாளர் கார்த்திக் தலைமையில், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் அருகில் உள்ள டீக்கடையில் டீ பிரியர்களுக்கு ஒரு நாள் சலுகையாக ஒரு ரூபாய்க்கு டீ வழங்க முடிவு செய்தனர். இந்நிலையில் இதனை அறிந்த அப்பகுதி மக்கள் அங்கு திரண்டனர். அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு ஒரு ரூபாய் டீ வழங்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் ஒரு ரூபாய் டீ-யை அருந்திச் சென்றனர்.