உலகில் முன்னணி ஜீன்ஸ் பிராண்ட் லேவிஸ் (Levi's). 1873ஆம் ஆண்டில் அசல் நீல நிற ஜீன்ஸ் பேண்ட் தயாரித்து வெற்றிக்கண்டவர் லேவிஸ்.
இதனைத் தொடர்ந்து 1934ஆம் ஆண்டில் பெண்களுக்கான முதல் ஜீன்ஸ் பேண்டை இந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இதனைத் தொடர்தது பெண்களுக்கான பேஷனில் இந்த நிறுவனம் எப்போது புரட்சியை ஏற்படுத்தி வருகிறது.
பெண்களுக்கு என ஜீன்ஸில் பல மாற்றங்களை 86 ஆண்டுகளாக ஏற்படுத்திவரும் இந்த நிறுவனம் தற்போது சர்வதேச அளவில் இளைஞர்களை கவரும் விதமாக நடிகை தீபிகா படுகோனே ஐகான் ஆக நியமித்துள்ளது.
இதுகுறித்து தீபிகா கூறுகையில், "நம்பகத்தன்மை, அசல் தன்மை, நேர்மை ஆகியவை இந்த பிராண்ட்டின் கட்டமைக்கப்பட்ட மதிப்புகள். நான் எப்போதும் ஜீன்ஸ், டி-ஷர்ட் அணியும் பெண்ணாகவே இருக்கிறேன். இது எனக்கு செளகாரியமாகவும் நம்பிக்கையுடனும் இருக்க உதவுகிறது.
உலகில் முன்னணி நிறுவனமான லேவிஸூடன் இணைந்திருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உணர்கிறேன்" என்றார்.
இதையும் படிங்க: ரித்திக் - தீபிகாவின் ‘ஃபைட்டர்’ பட்ஜெட் ரூ. 250 கோடி