ஹாலிவுட்டில் 1994ஆம் ஆண்டு ராபர்ட் ஸெமிக்ஸ் இயக்கத்தில் டாம் ஹாங்ஸ் நடிப்பில் வெளியான படம் 'ஃபாரஸ்ட் கம்ப்' (Forrest Gump). இந்தப் படம் 1986ஆம் ஆண்டு வின்ஸ்டன் க்ரூம் எழுதிய நாவலின் அடிப்படையில் உருவானது. ஹாலிவுட்டில் வெளியான மிகச்சிறந்த படங்களில் ஒன்றாக கருதப்படும் இப்படம் 5 ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது.
'ஃபாரஸ்ட் கம்ப்' படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் இந்தியில் 'லால் சிங் சட்டா' (Laal Singh Chaddha) என்னும் பெயரில் உருவாகி வருகிறது. இதை அட்வைத் சந்தன் இயக்க ஆமிர் கான் (Aamir Khan) தயாரித்து நடித்துள்ளார். இவருடன் கரீனா கபூர், நாக சைதன்யா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு கார்கில் உள்ளிட்ட பகுதிகளில் நடைப்பெற்றது.
-
We are happy to share our new poster and our new release date :) #LaalSinghOnBaisakhi#AamirKhan #KareenaKapoorKhan #AdvaitChandan @atul_kulkarni @ipritamofficial @OfficialAMITABH #KiranRao @Viacom18Studios @chay_akkineni #MonaSingh #ManavVij #SatyajitPande #HemantiSarkar pic.twitter.com/VOz3RBjHZz
— Aamir Khan Productions (@AKPPL_Official) November 20, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">We are happy to share our new poster and our new release date :) #LaalSinghOnBaisakhi#AamirKhan #KareenaKapoorKhan #AdvaitChandan @atul_kulkarni @ipritamofficial @OfficialAMITABH #KiranRao @Viacom18Studios @chay_akkineni #MonaSingh #ManavVij #SatyajitPande #HemantiSarkar pic.twitter.com/VOz3RBjHZz
— Aamir Khan Productions (@AKPPL_Official) November 20, 2021We are happy to share our new poster and our new release date :) #LaalSinghOnBaisakhi#AamirKhan #KareenaKapoorKhan #AdvaitChandan @atul_kulkarni @ipritamofficial @OfficialAMITABH #KiranRao @Viacom18Studios @chay_akkineni #MonaSingh #ManavVij #SatyajitPande #HemantiSarkar pic.twitter.com/VOz3RBjHZz
— Aamir Khan Productions (@AKPPL_Official) November 20, 2021
சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இன்று (நவ. 20) லால் சிங் சட்டா திரைப்படம் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அடுத்தாண்டு ஏப்ரல் 14ஆம் தேதி யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'கே.ஜி.எஃப் 2' (KGF2) திரைப்படம் திரையரங்கில் வெளியாகவுள்ளது. அதே போல் விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'பீஸ்ட்' (Beast) படமும் ஏப்ரலில் வெளியிட திட்டமிடப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: 2022இல் கேஜிஎஃப் 2 நிச்சயம் ரிலீஸ் - நடிகர் யாஷ் உறுதி