2015ஆம் ஆண்டு வெளியான ‘தில்வாலே’ படத்தின் மூலம் இணைந்த வருண் தவான் - க்ரிட்டி சனோன் ஜோடி, தற்போது அமர் கௌசிக் இயக்கத்தில் உருவாகும் ‘பேடியா’ படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர்.
இந்த படத்தை 2021 ஜனவரி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. ஷ்ரதா கபூர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியான நிலையில், க்ரிட்டி சனோன் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த படத்தின் தயாரிப்பாளர் தினேஷ் விஜயனுடன் க்ரிட்டிக்கு நல்ல நட்பு இருப்பதே இந்த வாய்ப்புக்கு காரணம் என கூறப்படுகிறது.
இதனையடுத்து க்ரிட்டி சனோன் ராஜ்குமார் ராவ்வுடன் இன்னும் பெயரிடப்படாத புதிய படத்தில் நடித்து வருகிறார். இதனை அபிஷேக் ஜெயின் இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சண்டிகரில் நடைபெற்றுவந்தது. படப்பிடிப்பு நிறைவு பெற்றதும் டிசம்பர் 6ஆம் தேதி வீட்டிற்கு க்ரிட்டி சனோன் திரும்பினார். பின் அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் க்ரிட்டிக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
படப்பிடிப்பில் இவருடன் இருந்தவர்களுக்கு கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. சமீபத்தில் 'ஜக் ஜக் ஜீயோ' படத்தின் கதநாயகன் வருண், இயக்குநர் ராஜ் மேத்தா ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஜக் ஜக் ஜீயோ: இயக்குநர், நாயகனுக்கு கரோனா உறுதி!