தேசியா ஊரடங்கால் பொதுமக்களின் வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக தினக்கூலி தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு உதவ பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் தனது ’கே பியூட்டி’ மூலம் டி ஹாட் என்ற அறக்கட்டளையுடன் ஒன்றிணைந்து உதவியுள்ளார்.
இது குறித்து கத்ரீனா தனது சமூகவலைதளப் பக்கத்தில் கூறுகையில், ’இந்த மாதம் நாம் அனைவருக்கும் கடினமான ஒரு மாதம். ஆனால் இந்த தொற்று நோயை சமாளிக்க நாம் மேற்கொள்ளும் முயற்சிகளை பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது.
இந்த நேரத்தில் நம்மைவிட பெரிதும் பாதிக்கப்படும் மக்கள் இருக்கின்றனர். இவர்கள் மற்றவர்களைவிட பெரிதும் துன்பப்படுகின்றனர். இவர்களுக்கு கே பியூட்டி மூலம் டி ஹாட் அறக்கட்டளை மூலம் ஒன்றிணைந்துள்ளோம்.
இதன் மூலம் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பண்டாரா மாவட்டத்தில் தினக்கூலி பெறும் தொழிலாளர்களுக்கு ஆதரவளிக்கிறோம். இவர்களுக்கு வேண்டிய உணவு, அத்தியாவசியப் பொருள்களை அறக்கட்டளையுடன் இணைந்து வழங்க உள்ளோம்.
எல்லோரும் பாதுகாப்பாக இருங்கள். நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்’ என பதிவிட்டுள்ளார்