ETV Bharat / sitara

மாலத்தீவில் கத்ரீனா கைஃப்! - கத்ரீனா கைஃப்

மயக்கம் என்ன... இந்த மௌனம் என்ன என்பது போல் நடிகை கத்ரீனா கைஃப் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அவரது ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளன.

Katrina Kaif
Katrina Kaif
author img

By

Published : Jan 24, 2022, 7:20 PM IST

ஹைதராபாத் : பாலிவுட் திரையுலகில் நடிகர்களுக்கு இணையாக ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகை கத்ரீனா கைஃப். இவர் அண்மையில் விக்கி கௌஷால் என்பவரை கரம் பிடித்தார்.

இந்நிலையில் கத்ரீனா கைஃப் தனது மாலத்தீவு டைரீஸ் புகைப்படங்கள் சிலவற்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்தப் புகைப்படங்கள் பனி அடர்ந்த கார்காலத்தில் இதமளிக்கும் சூரியன் போன்று அவரது ரசிகர்களை குதுகலமாக்கியுள்ளது. எனினும் நடிகை கத்ரீனா கைஃப் தன்னைப் புதுப்பித்துக்கொள்ள மாலத்தீவு சென்றாரா அல்லது அடுத்து வரும் சினிமா படப்பிடிப்புக்கு சென்றுள்ளாரா என்பது குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

ஜன.22ஆம் தேதி கத்ரீனா கைஃப் மும்பை விமான நிலையத்தில் தோன்றினார். அப்போது அவர் கணவரை காண மத்தியப் பிரதேசம் செல்கிறார் என்று யூகிக்கப்பட்டன.

இந்நிலையில் கத்ரீனா கைஃப் தனது மாலத்தீவு புகைப்படங்கள் சிலவற்றை பகிர்ந்துள்ளார். நடிகை கத்ரீனா கைஃப் கைவசம், டைகர் 3 உள்ளிட்ட படங்கள் உள்ளன. மேலும், ஃபர்ஹான் அக்தரின் ஜீ லே ஜாரா படத்திலும் நடித்துவருகிறார். இந்தப் படத்தில் பிரியங்கா சோப்ரா மற்றும் ஆலியா பட் ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர்.

இதற்கிடையில் நடிகை கத்ரீனா கைஃப் ஸ்ரீராம் ராகவன் படத்துக்கு பின்னர் விஜய் சேதுபதியுடன் மெர்ரி கிறிஸ்மஸ் என்ற படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : அட அட.. விமான நிலையத்தில் ராஷ்மிகா!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.