ETV Bharat / sitara

சூப்பர் ஹீரோவாக நடிக்கும் சாக்லேட் பாய் கார்த்திக் ஆர்யன்?

ஹைதராபாத்: நடிகர் கார்த்திக் ஆர்யன் அடுத்தாக சூப்பர் ஹீரோ படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகிவுள்ளது.

Aaryan
Aaryan
author img

By

Published : Dec 18, 2020, 7:17 PM IST

Updated : Dec 18, 2020, 7:24 PM IST

நடிகர் கார்த்திக் ஆர்யன் தனது நடிப்பில் உருவாகியுள்ள டமாகா (Dhamaka) படத்தின் படப்பிடிப்பை சமீபத்தில் முடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இயக்குநர் வாசன் பாலா இயக்கவுள்ள சூப்பர் ஹீரோ படத்தில் நடிக்க கார்த்திக் ஆர்யன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குற்றங்களுக்கு எதிராக சண்டையிடும் சூப்பர் ஹீரோவின் காமிக் புத்தகத்தை அடிப்படையாக இப்படம் உருவாகவுள்ளது. இதுநாள் வரை சாக்லேட் பாயாக நடித்த கார்த்திக் ஆர்யன் முதன் முறை த்ரில்லர் படத்தில் சூப்பர் ஹீரோவாக நடிக்கவுள்ளார்.

இந்த படத்தை ரோனி ஸ்க்ரூவாலா தயாரிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக இந்த திட்டம் தள்ளிவைக்கப்பட்டது. தற்போது படக்குழுவினர் புதிய திட்டத்தை வகுத்து வருகின்றனர். இதுகுறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Last Updated : Dec 18, 2020, 7:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.