உலகை அச்சுறுத்தி வரும் கரோனா தொற்று இந்தியாவில் அதிவேகமாக பரவி வருகிறது. இந்த கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது. அதுமட்டுமல்லாது கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக பொதுமக்களும் பிரபலங்களும் நிதிகளை வழங்கிவருகின்றனர்.
இதையடுத்து, பாலிவுட்டின் பிரபல இயக்குநரும் தர்மா புரொடக்ஷ்ன்ஸ் தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு எப்போதும் ஆதரவளிப்பதாக தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியுள்ளார்.
- — Karan Johar (@karanjohar) April 18, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
— Karan Johar (@karanjohar) April 18, 2020
">— Karan Johar (@karanjohar) April 18, 2020
அதில், கடந்த ஒரு மாதமாக நாம் அனைவரும் வீட்டில் இருந்து வருகிறோம். இந்த ஊரடங்கு உத்தரவுக்கு இந்தியா முழுவதும் ஒன்றுபட்டு உள்ளது. ஆனால் நாம் இந்த கரோனாவில் இருந்து தப்பிப்பதற்கு இன்னும் நிறைய விஷயங்கள் செய்ய வேண்டியுள்ளது. அப்படி செய்தால் மட்டுமே நாம் கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெற முடியும்.
இந்த ஊரடங்கு உத்தரவு மேலும் நீட்டிக்கப்பட்டால் தினசரி கூலித் தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு அடுத்த வேளை உணவு எப்படி கிடைக்கும் என்பது குறித்து மிகவும் பயப்படுவார்கள். இந்த பயம் மிகவும் கொடூரமானது.
இந்த சூழ்நிலை நமது தவறு இல்லை. அதுமட்டுமல்லாது அவர்களுக்கு நாம் உதவுவது தார்மீக பொறுப்பும் கூட. இந்த சூழ்நிலையில் அவர்களுக்கு உதவ அரசாங்கமும் பல தொண்டு நிறுவனங்களும் எடுக்கும் முயற்சிக்கு தர்மா புரொடக்ஷ்ன்ஸ் முழு ஆதரவும் வழங்கும். இதுவே எங்கள் பங்களிப்பாகும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து கோவிட்-19 உடன் போராடுவோம்.
பிரதமர் நிவாரண நிதி, மகாராஷ்டிரா முதலமைச்சரின் நிவாரண நிதி உள்ளிட்ட அரசு அங்கீகரித்த அமைப்புகளுக்கு தர்மா புரொடக்ஷ்ன்ஸ் சார்பில் நிதியுதவியை கரண் ஜோஹர் வழங்கியுள்ளார்.