மும்பை: இந்திய சினிமாவின் அடையாளமாகவும், முதல் பெண் சூப்பர்ஸ்டார் நடிகையாகவும் திகழும் ஸ்ரீதேவி வாழ்க்கையை வைத்து ஸ்ரீதேவி - தி எதெர்னல் ஸ்கீரின் காடஸ் என்ற புத்தகத்தை, பாலிவுட் நடிகர், தயாரிப்பாளர் கரண் ஜோகர், நடிகை தீபிகா படுகோனே ஆகியோர் வெளியிடவுள்ளனர்.
இந்தப் புத்தகம் வரும் 22ஆம் தேதி வெளியிடப்படுகிறது. மும்பையில் நடைபெறும் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் கரண் ஜோகரும் டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் தீபிகா படுகோனேவும் வெளியிடவுள்ளனர்.
எழுத்தாளர் சத்யார்த் நாயக் புத்தகம் குறித்து கூறியதாவது, "ஸ்ரீதேவியின் வாழ்க்கை குறித்த இந்தப் புத்தகத்தை மும்பையில் வைத்து கரண் ஜோகர் வெளியிடுவது மிகவும் பொருத்தமாக இருக்கும் எனக் கருதுகிறேன். ஏனென்றால் அவர் ஸ்ரீதேவி குறித்து பல்வேறு அரிய தகவல்களையும் நினைவுகளையும் பகிர்ந்தார். அவற்றையெல்லாம் தொகுத்து எழுத்து வடிவமாக மாற்றியுள்ளேன். எனவே இந்தப் பயணத்தில் அவரது பங்கு முக்கியத்துவமானது. புத்தக வெளியீட்டுக்கு ஒப்புக்கொண்டதற்காக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.
இதனிடையே ஸ்ரீதேவி புத்தக வெளியீடு குறித்து கரண் ஜோகர் தனது ட்விட்டரில், எனக்கு மிகவும் பிடித்தமான நடிகையாகத் திகழும் அவரது பாரம்பரியத்தை யாராலும் ஈடுசெய்ய முடியாது. ஸ்ரீதேவியின் தனிப்பட்ட வாழ்க்கை மட்டுமல்லாமல் தொழில்மீது அவர் காட்டிய அக்கறை ஆகியவற்றை இந்தப் புத்தகம் உள்ளடக்கியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
-
My all time favourite actor....her legacy is irreplaceable ....this book encapsulates he tremendous body of work and the professional and personal lives she gloriously impacted ...written by @SatyarthNayak for @PenguinIndia https://t.co/fDzaAtGBmH pic.twitter.com/KUUoLxgxy3
— Karan Johar (@karanjohar) December 15, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">My all time favourite actor....her legacy is irreplaceable ....this book encapsulates he tremendous body of work and the professional and personal lives she gloriously impacted ...written by @SatyarthNayak for @PenguinIndia https://t.co/fDzaAtGBmH pic.twitter.com/KUUoLxgxy3
— Karan Johar (@karanjohar) December 15, 2019My all time favourite actor....her legacy is irreplaceable ....this book encapsulates he tremendous body of work and the professional and personal lives she gloriously impacted ...written by @SatyarthNayak for @PenguinIndia https://t.co/fDzaAtGBmH pic.twitter.com/KUUoLxgxy3
— Karan Johar (@karanjohar) December 15, 2019
இந்தப் புத்தகத்திற்கான முன்னுரை நடிகை கஜோல் எழுதியுள்ளார்.
1980களில் பாக்ஸ் ஆபிஸ் குயினாக இந்திய சினிமாவை ஆக்கிரமித்த நடிகை ஸ்ரீதேவி 2018ஆம் தேதி பாத்டப்பில் தவறிவிழுந்து உயிரிழந்தார். அவரது மறைவு குறித்து பல்வேறு கேள்விகளும் எழும்பிய நிலையில், ஸ்ரீதேவியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு திரைப்படம் எடுக்கும் முயற்சியும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதனிடையே தற்போது அவரது வாழ்க்கையை எடுத்துக்கூறும் புத்தகம் வெளியிடப்படவுள்ளது.