ETV Bharat / sitara

சங்கி பெண் என விமர்சனம்: சூடான புகைப்படத்துடன் கங்கனா பதில்! - ஹாட் சங்கி கங்கனா

மணாலி: நடிகை கங்கனா ரனாவத் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கும் இரண்டு புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

kangana
kangana
author img

By

Published : Jun 10, 2021, 10:24 PM IST

கரோனா ஊரடங்கு காரணமாக மணாலியில் தனது குடும்பத்தினருடன் வசித்துவரும் கங்கனா, அவரது சமூக வலைதளப்பக்கத்தில் சமூகம், அரசியல் குறித்தான கருத்துகளைத் துணிச்சலாகப் பதிவிட்டு அவ்வப்போது நெட்டிசன்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்திவருவார்.

இவரின் சர்ச்சைக் கருத்துகளால் ட்விட்டர் நிறுவனம், கங்கனாவின் ட்விட்டர் பக்கத்தைச் சமீபத்தில் முடக்கியது. இதனால் கங்கனா தனது கருத்தை இன்ஸ்டாகிராம் வாயிலாகத் தெரிவித்துவருகிறார்.

சமூக வலைதளத்தில் ஒன்றிய அரசை யாரேனும் குறை கூறினால் அவர்களை கங்கனா கடுமையாக விமர்சிக்காமல் இருக்கமாட்டார். இதனால் இவர் பிரதமர் மோடியின் ஆதரவாளர், பாஜகவின் தீவிர தொண்டர் என்றெல்லாம் நெட்டிசன்கள் அவரை அழைத்துவருகின்றனர்.

kangana
கங்கனாவின் போஸ்ட்

தற்போது கங்கனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரண்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் ஒன்றில் மேலாடையுடன் இருக்கும் கங்கனா ஹாட் சங்கி (#HotSanghi) எனப் பதிவிட்டுள்ளார், மற்றொரு புகைப்படத்தில் பிகினி போன்ற உடையில் இருக்கும் கங்கனா, சிலர் சங்கி பெண்கள் கவர்ச்சியாக இருப்பதில்லை எனக் கூறுவார்கள். அவர்களுக்காக இது எனப் பதிவிட்டுள்ளார்.

kangana
கங்கனாவின் போஸ்ட்

இந்த இரண்டு புகைப்படங்களும் தற்போது சமூக வலைதளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக இமாச்சலப்பிரதேச அரசியலில் கங்கனா ஈடுபட வாய்ப்பு இருப்பதாக மூத்த பாஜக தலைவர் ஒருவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.