ETV Bharat / sitara

பாலிவுட்டில் போதைப்பொருள் சர்ச்சை - ரன்வீர், ரன்பீரை வம்புக்கு இழுக்கும் கங்கனா - ரன்வீர் சிங்

மும்பை: ரன்வீர் சிங், ரன்பீர் கபூர் உள்ளிட்டவர்களின் ரத்த மாதிரிகளை பரிசோதிக்க வேண்டும் என நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.

கங்கனா ரனாவத்
கங்கனா ரனாவத்
author img

By

Published : Sep 2, 2020, 4:44 PM IST

பாலிவுட்டில் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் பெரும் சர்ச்சைகளையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தி உள்ளது. இவரின் மரணம் தொடர்பான வழக்கு தற்போது சிபிஐ, அமலாக்க இயக்குநரகம், போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் என இந்திய அரசின் முக்கிய துறைகள் விசாரித்து வருகிறது.

இதற்கிடையில், சமீபத்தில் கங்கனா ரனாவத் பாலிவுட்டில் போதைப்பொருள்களின் பயன்பாடு அதிகமாக உள்ளதாக குற்றச்சாட்டு கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து கங்கனாவின் சமீபத்திய ட்விட்டர் பதிவில், "ரன்வீர் சிங், ரன்பீர் கபூர், அயன் முகர்ஜி, விக்கி கௌஷிக் ஆகியோர் தங்கள் இரத்த மாதிரிகளை போதைப்பொருள் பரிசோதனைக்கு கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

  • I request Ranveer Singh, Ranbir Kapoor, Ayan Mukerji, Vicky Kaushik to give their blood samples for drug test, there are rumours that they are cocaine addicts, I want them to bust these rumours, these young men can inspire millions if they present clean samples @PMOIndia 🙏 https://t.co/L9A7AeVqFr

    — Kangana Ranaut (@KanganaTeam) September 2, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அவர்கள் கொக்கைன் அடிமைகளாக இருப்பதாக வதந்திகள் உள்ளன. அவர்கள் இந்த வதந்திகளை உடைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இவர்களுக்கு மில்லியன் கணக்கிலான இளைஞர்கள் ரசிகர்களாக உள்ளனர். எனவே இவர்கள் ரத்தப் பரிசோதனை செய்து அதன் முடிவுகளை வெளியிட்டால், இளைஞர்களை அது ஊக்குவிக்கும்" என பதிவிட்டுள்ளார்.

கங்கனாவின் இந்த பதிவு, பாலிவுட்டின் முக்கிய நடிகர்கள் போதைப்பொருள்களை பயன்படுத்துகிறார்கள் என்பதை மறைமுகமாக சுட்டிக் காட்டுகிறாரா, அல்லது இளைஞர்களை இவர்கள் ஊக்குவிக்க வேண்டுகோள் விடுகிறாரா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

முன்னதாக, பாலிவுட்டில் பெரிய நட்சத்திரங்களின் வீடுகளில் நடக்கும் பார்ட்டிகளுக்கு சென்றால் கொக்கைன் இலவசமாக வழங்கப்படும் என கங்கனா தெரிவித்திருந்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.