தமிழில் 2008ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான திரைப்படம் 'தாம்தூம்'. இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்தவர் பிரபல பாலிவுட் நடிகை கங்கணா ரனாவத்.
தற்போது அவர், ராஜ்குமார் ராவ் நடிப்பில் பிரகாஷ் கோவெலமுடி இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜட்ஜ்மென்டல் ஹை க்யா' திரைப்படம் நடித்துள்ளார்.
இதில், அரங்கேறிய ஒரு கொலையின் குற்றவாளிகளாக கங்கணா ரனாவத்தையும், ராஜ்குமார் ராவ்வையும் சந்தேகிக்கின்றனர் காவல் துறையினர். இருவரில் அந்த கொலையை செய்து யார் என்பதைக் கண்டுபிடிக்கும் வகையில் அட்டகாசமான த்ரில்லர் படமாக உருவாகி உள்ள இத்திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.
இந்த திரைப்படம் வரும் 26ஆம் தேதி வெளியாகவுள்ளது.