தமிழில் பரத் நடிப்பில் வெளியான 'பழனி' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர், நடிகை காஜல் அகர்வால். தற்போது அவர் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம்வருகிறார்.
இவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 30ஆம் தேதி மும்பை தொழிலதிபரான கௌதம் கிச்லு என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின் கணவருடன் மாலத்தீவுக்கு தேனிலவுக்கு சென்ற காஜல் அகர்வால் அங்கிருந்து புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட அது வைரலானது.
இன்று (அக்டோபர் 30) காஜல் அகர்வால் - கௌதம் கிச்லு திருமணமாகி ஒரு வருடம் ஆகிறது. இதையடுத்து, காஜல் தனது சமூகவலைதளப்பக்கத்தில், "என் வாழ்க்கையில் எப்போதும் சிறப்பான நிகழ்வு நடைபெற்ற தினம். முதலாமாண்டு திருமணநாள் வாழ்த்துகள் கெளதம். நள்ளிரவில் உறக்கத்தில் கூட நீங்கள் ஐ லவ் யூ என சொல்கிறீர்கள்" எனப் பதிவிட்டார்.
அதே போல் கெளதம் தனது சமூகவலைதளப்பக்கத்தில், "என் அன்பே முதலாம் ஆண்டு திருமணநாள் வாழ்த்துக்கள். நாள்கள் எவ்வளவு வேகமாக பறந்தது என தெரியவில்லை. ஆனால் இது என் வாழ்வில் மிக அற்புதமான புதிய அத்தியாம். நீ என் தோழியாக சிறந்த நண்பராக என் வாழ்க்கை பார்ட்னராக இருப்பதால் என் வாழ்வு எளிதானதாக இருக்கிறது" எனப் பதிவிட்டுள்ளார்.
காஜல் அகர்வால் - கௌதம் கிச்லு திருமணநாளையடுத்து ரசிகர்களும் பிரபலங்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் பாருங்க: தேன்நிலவில் காஜல் அகர்வால்: வைரலாகும் புகைப்படங்கள்!