ETV Bharat / sitara

'அவளுடன் அம்மாவின் அரவணைப்பைப் பகிர எனக்கு பிடிக்காது' - ஜான்வி கபூர் - National news

குழந்தைப் பருவத்தில் சகோதரி குஷி கபூருடன் அம்மாவின் அரவணைப்பைப் பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை என ஜான்வி கபூர் தனது சமூக வலைதளப்பக்கத்தில் கூறியுள்ளார்.

Janhvi
Janhvi
author img

By

Published : May 12, 2020, 11:53 AM IST

நடிகை ஸ்ரீதேவியின் மறைவுக்குப் பின், அவரது மூத்த மகள் ஜான்வி கபூர் 'தடக்' என்ற இந்தி திரைப்படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். ஸ்ரீதேவிக்கு பாலிவுட் சினிமா வட்டாரம் அளித்து வந்த, அதே ஆதரவு அவரது மகளுக்கும் கிடைத்தது.

தனது உடலை பேணிக்காப்பதில் மிகுந்த கவனத்தோடு, இருந்து வரும் ஜான்வி கபூர் சமூக வலைதளப்பக்கத்திலும் படு ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். மே 10ஆம் தேதி கொண்டாடப்பட்ட அன்னையர் தினத்தை முன்னிட்டு, தனது சமூக வலைதளப்பக்கத்தில் குழந்தை கால புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

Janhvi
ஜான்வி கபூர் இன்ஸ்டா போஸ்ட்

அதில் குழந்தையாக இருக்கும் குஷி கபூரை ஸ்ரீதேவி, தனது மடியில் அமரவைத்து அரவணைக்கிறார். இதனை குழந்தைப்பருவ ஜான்வி கபூர், சிறிது இடைவெளிவிட்டு பார்த்து சிரிக்கிறார். இந்த புகைப்படத்திற்கு ஜான்வி கபூர் 'குஷியுடன் அம்மாவின் அரவணைப்புகளை பகிர்ந்து கொள்ள நான் விரும்பாத போது' என்று பதிவிட்டுள்ளார். இவரின் இந்தப் பதிவு ரசிகர்களாலும் சமூக வலைதளவாசிகளாலும் வெகுவாக கவரப்பட்டு உள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.