மறைந்த நடிகை ஸ்ரீதேவி - போனி கபூரின் மகள் ஜான்வி கபூர், தற்போது பாலிவுட் திரையுலகில் வளர்ந்துவரும் இளம் நடிகையாக உள்ளார். அவரது தாயின் மறைவுக்குப் பின் 2018ஆம் ஆண்டு தடக் என்ற படத்தின் மூலம் அறிமுகமான ஜான்வி தற்போது நான்கு படங்களில் பணியாற்றிவருகிறார்.
இதனிடையே ஜான்வியின் தந்தையும் பாலிவுட் தயாரிப்பாளருமான போனி கபூர், இன்று தனது 64ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அவருக்கு பல்வேறு பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.
இதனிடையே ஜான்வி கபூர் தனது இன்ஸ்டாகிராம் சமூக வலைதள பக்கத்தில் தனது தந்தையுடன் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் போனி கபூரின் இளம் வயது புகைப்படம், மகளுடன் இருக்கும் புகைப்படங்கள் ஆகியவை இடம்பெற்றிருந்தன.
ஜான்வி அந்தப் பதிவில், "பிறந்தநாள் வாழ்த்துகள் அப்பா. நான் உங்களிடம் இருந்தே ஆற்றலைப் பெறுகிறேன். நீங்கள் ஒவ்வொரு நாளும் எழுந்து உங்களுக்கு பிடித்தமான ஒன்றை அதிக ஈடுபாட்டுடன் செய்துவருகிறீர்கள். நீங்கள் விழுவதையும் பார்த்துள்ளேன் பின் அதைவிட அதிக ஆற்றலுடன் எழுவதையும் பார்த்துள்ளேன். அதுமட்டுமல்லாது எங்கள் எல்லோருக்கும் தேவையான சமயங்களில் வேண்டுகின்ற சக்தியை அளிப்பீர்கள்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
எனக்குத் தெரிந்தவரை உங்களைப் போன்று மிகச்சிறந்த ஆண் யாரும் இல்லை. எனக்கு ஊக்கமும் உத்வேகமும் அளித்த நீங்கள் ஒரு சிறந்த தந்தை மட்டுமல்ல சிறந்த நண்பரும்கூட. நான் உங்களை நேசிக்கிறேன்" எனப் பதிவிட்டிருந்தார்.
மேலும், நான் உங்களைப் பெருமையடைச் செய்வேன். உலகில் உள்ள அனைத்துவிதமான மகிழ்ச்சியையும் பெற நீங்கள் தகுதியானவர் என்றும் இந்த ஆண்டு உங்களுக்கு அதிகமான சந்தோஷம் கிடைக்க வேண்டும் என பிரார்த்தனை செய்வதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.