ETV Bharat / sitara

தாய்-தந்தையின் புகைப்படத்துடன் ஜான்வி கபூர் திருமண வாழ்த்து - ‌ஸ்ரீதேவி குறித்து ஜான்வி கபூர்

மறைந்த நடிகையும், தாயுமான ஸ்ரீதேவி குறித்து சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது நினைவலைகளை பகிர்ந்து வரும் நடிகை ஜான்வி கபூர், தற்போது பெற்றோரின் திருமண நாள் வாழ்த்துகளை புகைப்படத்துடன் தெரிவித்துள்ளார்.

Jhanvi kapoor wedding anniversary wishes for parents
Jhanvi kapoor latest news
author img

By

Published : Jun 3, 2020, 4:24 PM IST

மும்பை: பழைய புகைப்படத்தை பகிர்ந்து தனது தாய்-தந்தைக்கு திருமண நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார் நடிகை ஜான்வி கபூர்.

மறைந்த நடிகை ஸ்ரீதேவி - தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் ஜூன் 2, 1996ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.

இதையடுத்து, இவர்களுக்கு திருமண நாள் வாழ்த்து தெரிவிக்கும் விதமாக ஸ்ரீதேவி - போனி கபூர் இணைந்து அணைத்தவாறு இருக்கும் கருப்பு-வெள்ளை புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார், இந்தத் தம்பதியினரின் மூத்த மகளும், நடிகையுமான ஜான்வி கபூர்.

இதைப்பார்த்த பிரபலங்கள் பலரும் இதய எமோஜிகளுடன் தங்களது வாழ்த்துகளை பதிவிட்டு தள்ளியுள்ளனர்.

தனது தாய் ஸ்ரீதேவி குறித்து அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பதிவிட்டு வரும் ஜான்வி, தற்போது திருமண நாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

பாலிவுட் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளர்களுள் ஒருவராகத் திகழும் போனி கபூர் 1983இல் மோனா கபூர் என்பவரைத் திருமணம் செய்தார்.

இதையடுத்து இவர்களுக்கு அர்ஜூன் கபூர் என்ற மகனும், அனுஷுலா என்ற மகளும் பிறந்தனர். இதில் அர்ஜூன் கபூர் தற்போது பாலிவுட் சினிமாக்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

1996இல் மோனா கபூரிடமிருந்து விவாகரத்து பெற்ற பின் அதே ஆண்டில் நடிகை ஸ்ரீதேவியை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார் போனிகபூர். இதைத்தொடர்ந்து இவர்களுக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என இருமகள்கள் பிறந்தனர்.

தற்போது ஜான்வி கபூர் பாலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் கதாநாயகியாக திகழ்கிறார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.