ஹைதராபாத்: ஜான்வி தனது தந்தை போனி கபூரிடம் பொய் சொல்லிவிட்டு லாஸ் வேகாஸ் சென்றது குறித்து பகிர்ந்துள்ளார்.
கரினா கபூரின் ரேடியோ ஷோவில் கலந்துகொண்ட ஜான்வி, தனது தந்தையிடம் திரைப்படத்துக்கு போவதாக கூறிவிட்டு லாஸ் வேகாஸ் சென்றது குறித்து பகிர்ந்து கொண்டார். இதுகுறித்து ஜான்வி, என் அப்பாவிடம் ஒருமுறை பொய் சொல்லிவிட்டு லாஸ் வேகாஸுக்கு ஃபிளைட் ஏறிவிட்டேன். அங்கு போய் கொஞ்ச நேரம் ஊர் சுற்றிவிட்டு அடுத்த ஃபிளைட்டில் திரும்பி வந்தேன். அதன்பிறகே என் தந்தையிடம் இதுபற்றி கூறினேன் என்றார்.
மேலும் அவர், குழந்தைகள், இளைஞர்கள் வாழ்க்கையில் கிளர்ச்சிக்கு பெரும் பங்குண்டு. அவர்கள் செய்ய முடியாததை செய்ய நினைப்பார்கள். அதைதான் நானும் செய்தேன் என தனது லாஸ் வேகாஸ் பயணம் குறித்து தெரிவித்துள்ளார்.
குட் லக் ஜெர்ரி படத்தின் படப்பிடிப்புக்காக பஞ்சாப்பில் உள்ள ஜான்வி, தனது ரூஹிஅஃப்சா, தக்த், தோஸ்தானா 2 ஆகிய படங்களின் வெளியீடுக்காக காத்திருக்கிறார்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">