பவன் கிர்பலானி இயக்கத்தில் நடிகர்கள் சைஃப் அலி கான், அர்ஜுன் கபூர் ஆகியோர் திகில் நகைச்சுவை திரைப்படமான 'பூட் போலீஸ்' என்னும் படத்தில் நடிக்கவுள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு தர்மஷாலா, டல்ஹெளசி, பாலம்பூரில் தொடங்க உள்ளது.
முதல் முறையாக சைஃப் அலி கான் - அர்ஜுன் கபூர் இணைந்து நடிக்கின்றனர். தற்போது இப்படத்தில் ஜாக்குலின் பெர்னாண்டஸ், யாமி கௌதம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். கரோனா தொற்று சூழ்நிலை காரணமாக படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த ஆண்டின் இறுதிக்குள் படப்பிடிப்பை தொடங்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
திகில் நகைச்சுவை திரைப்படத்தில் இணையும் ஜாக்குலின் பெர்னாண்டஸ் - யாமி கௌதம் - yami gautam in bhoot police
மும்பை: திகில் நகைச்சுவை திரைப்படமான 'பூட் போலீஸ்' படத்தில் நடிகைகள் ஜாக்குலின் பெர்னாண்டஸ், யாமி கௌதம் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.