ஹைதராபாத்: திஷா படானியும், டைகர் ஷெராஃபும் காதலிக்கிறார்கள் என பாலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால், அந்த ஜோடி இதுகுறித்து வாய் திறப்பதாக இல்லை. இதுகுறித்து டைகர் ஷெராஃபின் தந்தையும், புகழ்பெற்ற நடிகருமான ஜாக்கி ஷெராஃப் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
வீடியோ கான்ப்ரன்சிங் மூலம் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் ஜாக்கியிடம் இதுபற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், அது அவனுடைய வாழ்க்கை. எனக்கு தெரிந்து அவன் 25 வயது முதல் டேட்டிங் பண்ண தொடங்கிவிட்டான்.
திஷாவும் டைகரும் மிக நல்ல நண்பர்கள். எதிர்காலத்தை பற்றி அவர்கள் என்ன முடிவு எடுத்திருக்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. டைகர் மற்ற எவற்றையும் விட வேலையில் கண்ணாக இருக்கக்கூடியவன். வேலைதான் அவனது முதல் காதல் என நான் பார்க்கிறேன் என தெரிவித்துள்ளார்.