'பாகுபலி', சாஹோ' போன்ற பிரமாண்ட படங்களைத்தொடர்ந்து பிரபாஸ் 'ஜில்' பட இயக்குநர் ராதா கிருஷ்ணன் இயக்கும் புதியப்படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக 'பிரபாஸ் 20' என பெயரிடப்பட்டிற்கும் இப்படத்தை கோபி கிருஷ்ணா மூவிஸ் யூவி கிரேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
இப்படத்தில் பிரபாஸூக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியாகிறது. தற்போது இந்த படத்தில் பாலிவுட் நடிகை பாக்யஸ்ரீ முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
இது குறித்து பாக்யஸ்ரீ கூறுகையில், பிரபாஸ் 20 நான் நடிக்கும் கதாபாத்திரம் முக்கியமானது. இதற்கு முன் செய்த ஒரு கதாபாத்திரமும் கூட. இந்த கதாபாத்திரத்திற்கு நான் நிறைய பயிற்சி எடுக்கவேண்டியுள்ளது. நான் நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒரு படத்தில் இருந்து மற்றொரு படத்திற்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்றார்.
இதையும் வாசிங்க: லண்டனைக் கலக்கிய பாகுபலி: லேட்டஸ்ட் புகைப்படங்கள்!