சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் நிகழ்ச்சி 2000ஆம் ஆண்டு முதல் உலகின் பல்வேறு இடங்களில் நடைபெற்றுள்ளது.
அந்த வகையில் இந்த ஆண்டுக்காக 21ஆவது IIFA விருதுகள் 2020 நிகழ்ச்சி மார்ச் மாதம் 21ஆம் தேதி மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் தொடங்கவுள்ளது. மேலும், 27ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நடைபெறும் அதன் தொடங்க நிகழ்சிகள் அனைத்தும் இந்தூரில் நடைபெற இருக்கிறது.
இது குறித்த செய்தியாளர் சந்திப்பு நேற்று போபாலில் நடைபெற்றது. அதில், மத்தியப் பிரதேச முதலமைச்சர் கமல்நாத், பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான், நடிகை ஜாக்குலின் ஃபெர்னான்டஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
IIFA விருதுகள் நிகழ்ச்சியை நடிகர்கள் சல்மான் கான், ரித்தீஷ் தேஷ்முக் ஆகியோர் தொகுத்து வழங்கவுள்ளனர். நடிகைகள் கத்ரீனா கைஃப், ஜாக்குலின் ஃபெர்னான்டஸ் ஆகியோரின் சிறப்பு நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன. இந்த நிகழ்வில் திரையுலகைச் சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொள்ள இருப்பதாகவும், 90 நாடுகளில் இதன் நிகழ்ச்சி நேரலை ஒளிப்பரப்பாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 30 கோடி ரூபாய் செலவில் இந்த பிரமாண்ட திரைப்பட விழா நடைபெறவுள்ளது.
முன்னதாக, நியூயாரக், மாட்ரிட், சிங்கப்பூர், பாங்காக் உள்ளிட்ட உலகின் பல்வேறு இடங்களில் நடந்துள்ள IIFA விருதுகள் நிகழ்ச்சி 2000ஆம் ஆண்டு முதல் நடக்கிறது. இந்தியாவில் இதற்கு முன்பு மும்பை நகரில் இவ்விருது விழா கோலாகலமாக நடைபெற்றிருந்த நிலையில், இரண்டாவது முறையாக போபாலில் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.
தஞ்சாவூர் பெரிய கோயில் குடமுழுக்கு: சிறப்பு பாடலை வெளியிட்ட இயக்குநர்!