2006ஆம் ஆண்டு வெளியான 'ரங் தே பசாந்தி' மூலம் அறிமுகமானவர் நடிகர் சந்தன் ராய் சன்யால். இவர் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது பத்திரிகையாளர்கள் அவரிடம் உங்களுக்கு ஏதேனும் கனவு கதாபாத்திரம் இருக்கிறதா எனக் கேட்டனர்.
அதற்குச் சந்தன், 'திரைத் துறையில் இருக்கும் ஒவ்வொரு நடிகனுக்கும் நடிகைக்கும் கனவு கதாபாத்திரம் இருக்கிறது. எனக்கு, சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது வென்ற 'ஜோக்கர்' நாயகன் வகீன் பீனிக்ஸ் கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை உள்ளது. அப்படத்தில் அவரின் உடல் மொழி எனக்கு மிகவும் பிடித்துள்ளது' என்றார்.
தொடர்ந்து சந்தன் பேசுகையில், "திரைத் துறையில் தான் இன்னும் திருப்பதியடையவில்லை. நான் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. முன்பு செய்தைவிட நான் இப்போது நன்றாக எனது பணியை செய்துகொண்டிருக்கிறேன்.
மலையாள சினிமாவில் நடிக்க விருப்பம் உள்ளது. மலையாள சினிமாவில் நிறைய சுவாரஸ்யமான நிகழ்வுகள் அரங்கேறிவருகின்றன. எனவே அதில் பணியாற்ற விருப்பம் இருக்கிறது" என்றார்.
விருப்ப இயக்குநர்கள் குறித்த கேள்விக்கு, மணிரத்னம், ஸ்ரீராம் ராகவன் ஆகியோர் தனக்கு மிகவும் பிடித்த இயக்குநர்கள்" என சந்தன் கூறினார்.