பாலிவுட் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான அனுராக் காஷ்யப், தன்னிடம் அத்தமீறியதாக பயால் கோஷ் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இந்தப் புகாரால் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் அனுராக்கிற்கு ஆதரவாக பல்வேறு பாலிவுட் பிரபலங்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர். குறிப்பாக, அனுராக் காஷ்யப்பின் முன்னாள் மனைவிகள் ஆர்த்தி பஜாஜ், நடிகை கல்கி ஆகியோரும் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.
தற்போது ஹியூமா குரேஷியும் அனுராக் காஷ்யப்புக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஹியூமா குரேஷி தனது ட்விட்டர் பக்கத்தில், "அனுராக்கும் நானும் கடைசியாக 2012 - 13 ஆம் ஆண்டு பணியாற்றினோம். அவர் ஒரு நல்ல நண்பர். அற்புதமான திறமை கொண்ட இயக்குனர். தனிப்பட்ட முறையில் என்னிடமும் நான் கேள்விப்பட்ட விதத்திலேயே அவர் தவறாக நடந்து கொண்டதில்லை. ஆனால் துன்புறுத்தலுக்கு ஆளானதாகச் சொல்பவர்கள் காவல்துறை நீதித்துறை என உரிய அலுவலர்களிடம் சென்று புகார் அளிக்க வேண்டும்.
இதுவரை நான் பேசாமல் இருந்ததற்கு காரணம் எனக்கு சமூக ஊடகத்தில் நடக்கும் சண்டையிலோ ஊடகங்களின் விசாரணையிலோ நம்பிக்கை இல்லை. இந்தப் பிரச்சினையில் என்னை இழுத்துவிட்டதற்கு நான் கடும் கோபத்தில் இருக்கிறேன். மேலும் ஒரு பெண்ணின் இவ்வளவு வருட கடின உழைப்பும் போராட்டமும் ஆதாரமில்லாத ஒரு குற்றச்சாட்டால் சிறுமைப்படுத்தப்படுகிறது. இது போன்ற விஷயங்களிலிருந்து தள்ளி இருப்போம்.
மீ டு இயக்கத்தின் புனிதத்தை பாதுகாப்பது ஆண் பெண் என இரண்டு தரப்பின் கூட்டுப் பொறுப்பாகும். இதுதான் எனது இறுதி பதில் இது பற்றி கருத்து கேட்க இனிமேல் என்னை தொடர்புகொள்ள வேண்டாம்" என்று பதிவிட்டுள்ளார்.
'நான் கடும் கோபத்தில் இருக்கிறேன்' - அனுராகிற்கு ஆதரவு தெரிவித்த ஹியூமா குரேஷி - அனுராக் காஷ்யப் புகார்
மும்பை: இயக்குநர் அனுராக் காஷ்யப்புக்கு ஆதரவாக ஹியூமா குரேஷி கருத்து தெரிவித்துள்ளார்.