பாலிவுட்டில் முன்னணி நடிகரான ரித்திக் ரோஷன் நடிப்பில் ஜூலை 12ஆம் தேதி வெளியானது 'சூப்பர் 30'. இப்படம் பிகாரைச் சேர்ந்த கணித ஆசிரியர் ஆனந்த் என்பவரது வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவானது. ஆனந்த் தனது ஏழ்மையிலும், மாணவர்களுக்கு கல்வியில் பெரும் உதவிகளைப் புரிந்தது மட்டுமல்லாமல் அவர்களை சாதனைப் படைக்கவும் உந்துதலாக இருந்துள்ளார்.
அவரை மையமாக வைத்தே இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. முக்கிய கதாபாத்திரத்தில் ரித்திக் ரோஷன் நடித்துள்ளார். படம் முழுவதும் பிகாரில் எடுக்கப்பட்டுள்ளது.
இப்படம் பாலிவுட்டில் பெரும் வரவேற்பைப் பெற்று வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், இப்படத்தை தமிழ் ராக்கர்ஸ், தனது இணையத்தில் வெளியிட்டுள்ளது. இணையத்தில் வெளியானதால் படத்தின் பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷன் பாதிக்கப்படும் என்று தயாரிப்பு நிறுவனம், படக்குழு அதிருப்தியில் உள்ளன.