ETV Bharat / sitara

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம்: ஆய்வில் இறங்கிய தடயவியல் துறையினர்! - நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம்: ஆய்வில் இறங்கிய தடய அறிவியல்

மும்பை: பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் குறித்து தடயவியல் ஆய்வகத்தினர் விசாரணை நடத்தி, 10 நாட்களில் அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளனர்.

சுஷாந்த் சிங்
சுஷாந்த் சிங்
author img

By

Published : Jun 15, 2020, 8:54 PM IST

மகேந்திர சிங் தோனியின் சுயசரிதைப் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர், நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத். இவர் நேற்று (ஜூன் 14) மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

இதையடுத்து சுஷாந்த் சிங்கின் உடல் மும்பையில் உள்ள கூபர் மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக கொண்டு செல்லப்பட்டது.

இந்நிலையில் உடற்கூறு ஆய்வு முடிவில், அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து இன்று (ஜூன் 15) மாலை அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

சுஷாந்த் சிங் ராஜ்புத் ஆறு மாதமாக மன அழுத்தத்தில் இருந்ததாகவும், அதற்காக மருத்துவரை அணுகவில்லை என்றும் காவல் துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மும்பையில் கலினாவில் உள்ள மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ், செயல்பட்டு வரும், தடய அறிவியல் ஆய்வகம் (forensic science lab), சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்டது குறித்து, 10 நாட்களில் விசாரணை நடத்தி, ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க உள்ளது.

நான்கு அலுவலர்கள் கொண்ட குழுவினர், ராஜ்புத்தின் பாந்த்ரா இல்லத்திலிருந்து, தற்கொலைக்குப் பயன்படுத்தியப் பொருட்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தக் குழுவின் அறிக்கைக்கு பின்னரே சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது படுகொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து தெரியவரும்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.