ETV Bharat / sitara

பாலைவனத்தில் வெறும் காலில் நடனம்... 'புர்ஜ் கலிஃபா' பாடல் பற்றி கியாரா அத்வானி - லக்‌ஷமி பாம் புர்ஜ் கலிஃபா பாடல்

பனிப்பொழிவின்போது சிஃப்பான் சேலைகளை அணிவதை விட கொடுமையானது, வெறும் காலில் பாலைவனத்தில் நடனமாடியது என்று கியாரா அத்வானி 'புர்ஜ் கலிஃபா' பாடலுக்கு நடனமாடிய அனுபவம் பற்றி கூறியுள்ளார்.

Kiara Advani in Burj Khalifa song
புர்ஜ் கலிஃபா பாடலில் கியாரா அத்வானி
author img

By

Published : Oct 18, 2020, 4:50 PM IST

டெல்லி: 'லஷ்மி பாம்' படத்துக்காக பாலைவனத்தில் வாட்டி வதைக்கும் வெயிலில் வெறும் காலில் நடனமாடியுள்ளார், பாலிவுட் நடிகை கியாரா அத்வானி.

இதுகுறித்து கியாரா அத்வானி கூறியிருப்பதாவது:' 'லஷ்மி பாம்' படத்தில் இடம்பெறும் புர்ஜ் கலிஃபா பாடலின் படப்பிடிப்பு மிகவும் சுவாரஸ்யமான அனுபவமாக அமைந்திருந்தது. ஆடம்பரமான ஆடையணிந்து மிகவும் ஆடம்பரமான இடத்தில் வைத்து படமாக்கப்பட்டது.

பனிப்பொழிவின்போது சிஃப்பான் சேலைகளை அணிவது கடினமாக இருக்கும் என்ற எண்ணம் பலருக்கும் உள்ளது. அதை விட கொளுத்தும் வெயில், வாட்டி வதைக்கும் விதமாக வெப்பம் இருக்க வெறும் காலில் நடனமாடுவது என்பது மிகவும் கடினமானது. கமர்ஷியல் படங்களில் நடித்துள்ள அனைத்து நடிகைகளும் நான் மேற்கூறிய விஷயங்களில் ஏதேனும் ஒன்றை கண்டிப்பாக செய்திருப்பார்கள்' என்றார்.

தமிழில் சூப்பர் ஹிட்டான 'காஞ்சனா' படத்தின் ரீமேக்காக உருவாகியிருக்கும் 'லஷ்மி பாம்' படத்தில் பாலிவுட் ஹீரோ அக்‌ஷய் குமார் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நாயகியாக கியாரா அத்வானி நடித்துள்ளார். நடிகர், இயக்குநர் ராகவா லாரன்ஸ் படத்தை இயக்கியுள்ளார்.

கடந்த வாரம் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது படத்தில் இடம்பெறும் புர்ஜ் கலிஃபா என்ற கவர்ச்சியான பாடலின் புரோமோ வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதையடுத்து பாடலின் முழு வீடியோவை இன்று (அக்டோபர் 18) வெளியிடவுள்ளனர்.

இதையும் படிங்க: 22ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்த காதல் காவியம் குச் குச் ஹோத்தா ஹை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.