ETV Bharat / sitara

பாலிவுட் நடிகரும் எம்.பி.-யுமான சன்னி தியோலுக்கு கரோனா உறுதி - சன்னி தியோலுக்கு உறுதி

சிம்லா( ஹிமாச்சல் பிரதேசம்): நடிகராக இருந்து அரசியல்வாதியாக உருவெடுத்த சன்னி தியோலுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

பாலிவுட் நடிகரும் எம்.பி.யுமான சன்னிதியோலுக்கு கரோனா உறுதி

author img

By

Published : Dec 2, 2020, 8:56 AM IST

பாலிவுட் நடிகரும் பாஜக மக்களவை உறுப்பினருமான சன்னி தியோலுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாலிவுட் நடிகரும் குர்டாஸ்பூர் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக எம்.பி.-யுமான சன்னி தியோலுக்கு, கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக ஹிமாச்சல் பிரதேஷ மாநில அரசு தெரியப்படுத்தியுள்ளது.

64 வயதாகும் பாலிவுட் நடிகர் சன்னிதியோல் அண்மையில் தோள்பட்டையில் அறுவை சிகிச்சை செய்துகொண்டு, ஹிமாச்சல்பிரதேச மாநில, மணாலியில் உள்ள பண்ணை வீட்டில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தார்.

இந்நிலையில் சன்னிதியோலுக்கு லேசான கரோனா தொற்று ஏற்பட்டதற்கான அறிகுறிகள் தென்படவே, கரோனா பரிசோதனை செய்துகொண்டபோது, அவருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

இதுகுறித்து ஹிமாச்சல் பிரதேச சுகாதாரத்துறைச் செயலாளர் அமிதாப் அஸ்வதி கூறுகையில், 'நடிகர் சன்னி தியோல் அண்மைக்காலமாக குலு மாவட்டத்தில் தங்கியிருந்தார். இதனிடையே சன்னிதியோலுக்கு கரோனா தொற்று உறுதியானதாக மாவட்ட தலைமை மருத்துவ அலுவலரிடம் இருந்து தகவல் கிடைத்தது. இதனிடையே மருத்துவர்களின் அறிவுறுத்தலின்பேரில் சன்னி தியோல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

இதுகுறித்தான முடிவுகள் செவ்வாய்க்கிழமை(டிச.01)தெரியவரவே, சன்னி தியோலின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அவரைப் பார்ப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட பயணம் ரத்து செய்யப்பட்டது' என்றார்.

இதையும் படிங்க: 3:45 மணி நேர பேச்சுவார்த்தை... தேநீரைகூட அருந்தாத விவசாயிகள்: நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.