டெல்லி : சினிமா மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் நடிகை ஏக்தா கபூர் திங்கள்கிழமை (ஜன.3) கரோனா பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டதை சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். தற்போது அவர் நலமுடன் உள்ளார்.
46 வயதான ஏக்தா கபூர் இன்ஸ்டாகிராமில் இதனை தெரிவித்து இருந்தார். இது குறித்து அவர், “எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்த போதிலும் எனக்கு கோவிட் பாசிட்டிவ் என வந்துள்ளது. நான் நலமாக உள்ளேன், என்னுடன் தொடர்பு கொண்ட அனைவரும் தங்களை பரிசோதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
முன்னதாக இன்று நடிகரும் தயாரிப்பாளருமான ஜான் ஆபிரஹாமின் மனைவி கரோனா பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவிவருகிறது. ஞாயிற்றுக்கிழமை (ஜன.2) ஒரே நாளில் மட்டும் 8 ஆயிரத்து 63 பேர் கரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதிலும் குறிப்பாக மும்பை மாநகரில் பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது.
இதையும் படிங்க : மெஸ்ஸி உள்பட 4 பிஎஸ்ஜி வீரர்களுக்கு கரோனா!