ஹைதராபாத்: இயக்குநர் பால்கியுடன் இணைந்து புதிய பாலிவுட் படம் ஒன்றில் துல்கர் சல்மான் பணியாற்ற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்வான், தி சோயா பேக்டர் உள்ளிட்ட இரண்டு பாலிவுட் படங்களில் நடித்திருந்த துல்கர் சல்மான், கடந்த இரு ஆண்டுகளாக வேறு எந்த பாலிவுட் படத்திலும் பணிபுரியவில்லை. தற்போது இயக்குநர் பால்கியின் புதிய படத்தில் அவர் பணிபுரிய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ட்ராமா டைப் படங்களை இயக்கிவந்த பால்கி, முதன்முறையாக த்ரில்லர் படம் ஒன்றை இயக்க திட்டமிட்டுள்ளார். இந்தக் கதை சல்மான் கானுக்கு பிடித்திருப்பதாக கூறப்படுகிறது.
பா, சீனி கம், கி & கா உள்ளிட்ட படங்களால் பாலிவுட் ரசிகர்களை ஈர்த்த பால்கி, த்ரில்லர் கதையோடு வந்திருப்பது அவரது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.