மும்பை: சுஷாந்தின் நடிப்பில் உருவான ‘தில் பெச்சாரா’ திரைப்படம் ஓராண்டை நிறைவு செய்துள்ளது. இதை முன்னிட்டு அதன் இயக்குநர் முகேஷ் ஜப்ரா, நடிகை சஞ்சனா சங்கி ஆகியோர் சுஷாந்த் சிங்கை நினைவுகூர்ந்துள்ளனர்.
’தில் பெச்சாரா’ பட இயக்குநர் முகேஷ் ஜப்ரா, சுஷாந்தின் நெருங்கிய நண்பர் ஆவார். இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், கலவையான உணர்வுகள்; சுஷாந்தை பிரிந்திருக்கிறேன். அன்பு மட்டும் என குறிப்பிட்டுள்ளார்.
நடிகை சஞ்சனா சங்கி, கிஸி பாசு கதாபாத்திரத்தில் நடித்தது என் வாழ்வை மாற்றிய அனுபவம். என்னை ஒரு நடிகராக உணரச் செய்தது அந்த கதாபாத்திரம்தான். சிறந்த படைப்பாளிகளுடன் பணியாற்ற கிடைத்த அந்த வாய்ப்பை என்னால் மறக்க முடியாது என பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவில் சுஷாந்த் சிங்கை டேக் செய்து, உன்னை நினைத்துப் பார்க்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
முகேஷ் ஜப்ரா இயக்கிய இப்படம் 'தி ஃபால்ட் இன் அவர் ஸ்டார்ஸ்' என்னும் பிரபல ஆங்கில நாவலை தழுவி எடுக்கப்பட்டது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் உருவாகியிருந்த இப்படம் மாபெரும் வெற்றியடைந்தது.
இதையும் படிங்க: ட்ரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் ‘கூழாங்கல்’