இயக்குநர் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் உருவான 'ராஞ்சனா' படத்தின் மூலம் தனுஷ் பாலிவுட்டில் அறிமுகமானார். அவர் அறிமுகமான முதல் படமே 100 கோடி வசூலை பெற்றது.
இந்நிலையில், மீண்டும் தனுஷ் பாலிவுட்டிற்குச் செல்லவிருப்பதாக பேச்சுகள் அடிபடுகின்றன. 'ராஞ்சனா' படத்தை இயக்கிய ஆனந்த் எல். ராய் தனுஷ் நடிக்கவிருக்கும் படத்தை இயக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.
மேலும் இப்படத்தில் ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்க இருக்கிறது. ரித்திக் ரோஷன், சாரா அலிகான் ஆகியோர் நடிக்க இருக்கின்றனராம். இப்படம் குறித்த கதை பகிர்வு நடைபெற்று வருவதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ரித்திக் ரோஷனுடன் தனுஷ் நடிக்கவிருப்பதால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. காதல் கலந்த நகைச்சுவைப் படமாக உருவாக இருப்பதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.