ETV Bharat / sitara

இன்ஸ்டாகிராம் வெல்நெஸ் கைட் : மனநலன் பேண ஆலோசனை வழங்கும் தீபிகா! - இன்ஸ்டிகிராம் வெல்நெஸ் கைட்

கடந்த சில வாரங்கள் வழக்கத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டு இருப்பதாகவும், பயத்துடனும், வருங்காலம் குறித்த நிச்சயமற்றத் தன்மையுடனும் மக்கள் நாட்களைக் கடத்தி வருவது வேதனை அளிப்பதாகவும் நடிகை தீபிகா படுகோன் தெரிவித்துள்ளார்.

தீபிகா படுகோன்
தீபிகா படுகோன்
author img

By

Published : May 19, 2020, 11:40 AM IST

2015ஆம் ஆண்டு முதல் தனது ’லிவ் லவ் லாஃப்’ நிறுவனம் மூலம் தொடர்ந்து மனநலன் பேணுவது குறித்து பேசியும், விழிப்புணர்வு ஏற்படுத்தியும் வருகிறார் நடிகை தீபிகா படுகோனே. இதற்காக, இந்த வருட ஆரம்பத்தில் உலக பொருளாதார அமைப்பின் க்ரிஸ்டல் விருதையும் அவர் பெற்றிருந்தார்.

இந்நிலையில், கடந்த சில வாரங்கள் வழக்கத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டு இருப்பதாகவும், பயத்துடனும், வருங்காலம் குறித்த நிச்சயமற்றத் தன்மையுடனும் மக்கள் அனைவரும் நாட்களைக் கடத்தி வருவது தனக்கு வேதனை அளிப்பதாகவும் தீபிகா தெரிவித்துள்ளார்.

  • Do not hesitate to seek support when you are feeling overwhelmed. #YouAreNotAlone.

    Click on my Instagram Wellness Guide for ideas and advice on nurturing your #MentalHealth during this period of uncertainty and beyond. https://t.co/z4JdLKST7V

    — Deepika Padukone (@deepikapadukone) May 18, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

உலக மனநல விழிப்புணர்வு மாதமான இந்த மாதத்தில், மக்கள் தங்களை உற்சாகமாக வைத்துக் கொள்ளும் வகையிலும், மனநலன் பேணுதலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையிலும் இன்ஸ்டாகிராமில் ’வெல்நெஸ் கைட்’ எனும் புதிய அம்சம் சேர்க்கபட்டுள்ளது.

இந்நிலையில் இன்ஸ்டாகிராமுடன் கைக்கோர்த்து இந்த வெல்நெஸ் கைட் மூலம், ஊரடங்கு காலத்தில் தன்னுடைய மனநிலையை எவ்வாறு கையாண்டு வருகிறார் என்பது குறித்தும், மனநலன் பேணுவது குறித்த ஆலோசனைகளையும் தீபிகா அனைவருடனும் பகிர்ந்து வருகிறார்.

இதையும் படிங்க : மனநலன் குறித்த கலந்துரையாடல் நிறுத்தி வைப்பு - வருத்தத்தில் தீபிகா

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.