இந்த ஆண்டு யாஹூ இந்தியா வெளியிட்ட அறிக்கையில் தசாப்தத்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படங்களில் ஆமிர் கான் நடிப்பில் 2016ஆம் ஆண்டு வெளியான 'தங்கல்' திரைப்படம் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. இப்படம் இந்தியா மட்டுமல்லாது சீனாவிலும் பெரும் வசூல் சாதனையை ஈட்டியுள்ளது.
நிதீஷ் திவாரியின் இயக்கத்தில் மல்யுத்தத்திற்குத் தன் இரு மகள்களை இந்தியாவுக்காக விளையாட தயார்படுத்தும் தகப்பனின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது 'தங்கல்' திரைப்படம்.
'தங்கல்' திரைப்படத்தைத் தொடர்ந்து சல்மான் கானின் 'பஜ்ரங்கி பைஜான்' திரைப்படம் இரண்டாவது இடத்தையும், அதைத்தொடர்ந்து மீண்டும் ஆமிர் கானின் 'பிகே' திரைப்படம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.
லிஸ்டில் 'சுல்தான்', 'டைகர் ஜிந்தா ஹை', 'தூம்-3', 'சஞ்சு', 'வார்', 'சென்னை எக்ஸ்பிரஸ்', 'தபாங்' ஆகிய திரைப்படங்கள் அடுத்தடு்த்த இடங்களைப் பிடித்துள்ளன.
இதையும் படிங்க: சன்னி செல்லத்துக்கு முதலிடம் பெற்றுக்கொடுத்த இணையவாசிகள்