ETV Bharat / sitara

பண்டி அவுர் பப்லி 2 படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி வெளியீடு! - Saif Rani Bunty Aur Babli 2

பண்டி அவுர் பப்லி 2 படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பண்டி அவுர் பப்லி 2
பண்டி அவுர் பப்லி 2
author img

By

Published : Feb 18, 2020, 8:16 PM IST

ஹிந்தியில் ஆதித்ய சோப்ரா தயாரிப்பில், வருண் ஷர்மா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'பண்டி அவுர் பப்லி 2'. கிட்டத்தட்ட 11 ஆண்டுகளுக்கு பிறகு இப்படம் மூலம் மீண்டும் சைஃப் அலி கான், ராணி முகர்ஜி இணைந்து நடித்துள்ளனர். அதுமட்டுமின்றி இவர்களுடன் சித்தாந்த் சதுர்வேதி, ஷர்வாரி வாக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

கிரைம், காமெடியாக உருவாகியுள்ள இப்படம் வரும் ஜூன் மாதம் 26ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. முன்னதாக இப்படத்தின் முதல் பாகம் கடந்த 2005ஆம் வெளியானது. அப்படம் எதிர்பார்த்ததைவிட ரசிகர்களிடம் அமோக வரவேப்பை பெற்றதால், 'பண்டி அவுர் பப்லி 2' படம் மீது பாலிவுட் வட்டாரத்தில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இப்படம் குறித்து இயக்குநர் வருண் ஷர்மா பேசுகையில், 'நாங்கள் இப்படத்திற்கு இதய வடிவில்தான் சின்னம் வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். ஏனென்றால் இப்படத்திற்கு அதுதான் சரியாக பொருந்தும். இப்படம் அனைத்து சினிமா ரசிகர்களையும் கவரும் என்று நம்புகிறோம்' என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க: 'இனிமேதான் தரமான சம்பவத்தை பார்ப்பீங்க'- கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ட்ரெய்லர் வெளியீடு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.