ETV Bharat / sitara

பரவசமடைந்த ரசிகர்! தெறித்து ஓடிய நடிகை

author img

By

Published : May 5, 2019, 12:50 PM IST

Updated : May 5, 2019, 1:06 PM IST

பாலிவுட் நடிகை வாணி கபூர் சென்ற காரை ரசிகர் ஒருவர் துரத்திச் சென்ற சம்பவம் பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை வாணி கபூர்

'ஆஹா கல்யாணம்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் வாணி கபூர். அப்படத்தில் நானியுடன் சேர்ந்து நடித்த 'லிப் லாக்' காட்சி பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்தியைப் போன்று 'ஆஹா கல்யாணம்' படத்தில் சுவாரஸ்யமான காட்சிகள் ஏதும் இல்லாமல், ரசிகர்களை சோர்வடைய வைக்கும் மோசமான திரைக்கதையால் இப்படம் படுதோல்வி அடைந்தது. இதையடுத்து பாலிவுட் பக்கம் சென்ற வாணி கபூர் கவர்ச்சியான வேடங்களில் நடித்து ரசிகர்களை கிறங்கடித்துவருகிறார்.

இந்நிலையில், இவர் நேற்று காரில் சென்றபோது பைக்கில் சென்ற ரசிகர் ஒருவர் வாணி கபூரை பார்த்ததும் பரவசமடைந்துள்ளார். இதையடுத்து அவர் சென்ற காரை பின்தொடர்ந்து சென்ற ரசிகர் விடாமல் துரத்திச் சென்றுள்ளார்.

அவர் பின்தொடர்வதை தெரிந்துகொண்ட நடிகை வாணி கபூர், ஓட்டுநரிடம் காரை வேகமாக ஓட்டும்படி கூறியுள்ளார். இதையடுத்து, அந்த ரசிகரிடமிருந்து எஸ்கேப் ஆன வாணி கபூர் வேறொரு நிகழ்ச்சிக்கு சென்று வந்த வழியிலேயே திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு காத்திருந்த அந்த ரசிகர் மீண்டும் வாணி கபூரின் காரை மறித்துப் பேச முயற்சித்துள்ளார்.

ரசிகரின் இந்த செயலால் அதிர்ச்சியடைந்த வாணி கபூர், அந்த ரசிகர் மீது மும்பை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், வீடு வரை தன்னை பின்தொடர்ந்து வந்துவிடுவார் என்ற அச்சத்தில் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகக் கூறப்படுகிறது.

ஒரு அதி தீவிர ரசிகர் காரில் சென்ற வாணி கபூரை விடாமல் துரத்திச் சென்ற சம்பவம் பாலிவுட் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Intro:Body:Conclusion:
Last Updated : May 5, 2019, 1:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.