ETV Bharat / sitara

பாலிவுட் 2019: சிறந்த அறிமுக நடிகர்கள் பட்டியல் - மலாய்

இந்த ஆண்டு பாலிவுட்டில் தடம்பதித்து, தங்களின் சிறந்த நடிப்பால் சினிமா ரசிகர்களை ஈர்த்த அறிமுக நடிகர்கள் பற்றிய தொகுப்பினை காண்போம்...

Bollywood 2019
Bollywood 2019
author img

By

Published : Dec 28, 2019, 5:31 PM IST

தாரா சுதாரியா

Bollywood 2019
தாரா சுதாரியா

‘ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர் 2’ படத்தின் மூலமாக அனான்யா பாண்டேவுடன் அறிமுகமானவர் தாரா சுதாரியா. அதன்பிறகு மிலாப் சாவெரி இயக்கிய ‘மர்ஜாவன்’ படத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா ஜோடியாக நடித்திருந்தார். இதில் இவரது நடிப்பு வெகுவான பாராட்டினைப் பெற்றது.

அனான்யா பாண்டே

Bollywood 2019
அனான்யா பாண்டே

பாலிவுட் நடிகர் ஜங்கி பாண்டே மகளான இவர், ‘ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர் 2’ படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு கார்த்திக் ஆர்யன் நடிப்பில் உருவான ‘படி பட்னி அவுர் ஓ’ படத்தில் நடித்திருந்தார். கொடுக்கப்படும் கதாபாத்திரத்தை சரியாக உள்வாங்கி நடிக்கக் கூடியவர்.

சயீ மஞ்சரேக்கர்

Bollywood 2019
சயீ மஞ்சரேக்கர்

சல்மான் கானின் ‘தபாங் 3’ படத்தின் மூலமாக அறிமுகமானார் சயீ மஞ்சரேக்கர். இவர் பிரபல பாலிவுட் நடிகரான மகேஷ் மஞ்சரேக்கரின் மகள் ஆவார். ‘தபாங் 3’ படத்தில் இவரது நடிப்பு நல்ல வரவேற்பை பெற்றது.

பிரனுதான் பாகி, ஷாகீர் இக்பால்

Bollywood 2019
பிரனுதான் பாகி, ஷாகீர் இக்பால்

சல்மான் கான் தயாரிப்பில் உருவான ‘நோட்புக்’ படத்தின் மூலம் பிரனுதான் பாகி, ஷாகீர் இக்பால் ஆகியோர் அறிமுகமாகினர். 2014ஆம் ஆண்டு தாய் (Thai) மொழியில் வெளியான ‘டீச்சர்ஸ் டைரி’ எனும் படத்தின் ரீமேக்தான் ‘நோட்புக்’. இதில் கபீர் கவுல் எனும் கதாபாத்திரத்தில் ஷாகீரும், பிர்தாஸ் காத்ரி எனும் கதாபாத்திரத்தில் பிரனுதான் பாகியும் நடித்திருந்தனர். இவர்களி நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.

கரண் தியோல்

Bollywood 2019
கரண் தியோல்

சன்னி தியோலின் மகனான இவர், ‘பல் பல் தில் கீ பாஸ்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இந்தப் படத்தை அவரது தந்தை சன்னி தியோலே இயக்கியிருந்தார். ஆனால் படம் பாக்ஸ்-ஆபிஸில் சரியாக போகவில்லை என்றாலும், இவரின் நடிப்பு பாராட்டப்பட்டது.

மீசான் ஜாஃப்ரி

Bollywood 2019
மீசான் ஜாஃப்ரி

இந்த ஆண்டு அறிமுகமான நடிகர்கள் பெரிதும் பாராட்டுகளைப் பெற்றவர் மீசான் ஜாஃப்ரி. இவர் பிரபல நகைச்சுவை நடிகர் ஜவத் ஜாஃப்ரியின் மகன் ஆவார். சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிய ‘மலாய்’ படத்தின் மூலம் அறிமுகமான இவரது நடிப்பு பாலிவுட் ரசிகர்களை அதிகம் ஈர்த்தது எனலாம்.

ஷாமின் செகல்

Bollywood 2019
ஷாமின் செகல்

சஞ்சய் லீலா பன்சாலியின் சகோதரர் மகளான இவரும், ‘மலாய்’ படத்தின் மூலமாகதான் பாலிவுட்டில் அறிமுகமானார். இதில் மீசான் ஜாஃப்ரிக்கு ஜோடியாக நடித்திருந்தார். திரைப்பட விமர்சகர்களால் இவரது நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது.

விஷால் ஜெத்வா

Bollywood 2019
விஷால் ஜெத்வா

சோனி டிவியில் ஒளிபரப்பான ‘பாரத் கா வீர் புத்ரா - மஹாரானா பிரதாப்’ தொடரின் மூலம் பரவலாக அறியப்பட்டவர் விஷால் ஜெத்வா. ராணி முகர்ஜி நடிப்பில் உருவான ‘மர்தாணி 2’ படத்தின் மூலமாக பாலிவுட்டுக்கு அறிமுகமானார். கொடூரமான பாலியல் வன்கொடுமை குற்றவாளியாக நடித்திருந்த விஷாலை பலரும் பாராட்டினர்.

இதையும் படிங்க: 'இருட்டு' பட நாயகியின் அதகளமான படங்கள்!

Intro:Body:

Bollywood 2019

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.